ஒன்னு இல்ல மூணு… கோலிவுட்டின் மூன்று பிரம்மாண்டங்களை வளைத்து தூக்கிய அக்கட தேசம்!...
Kollywood: கொடிக்கட்டி பறந்துவந்த கோலிவுட்டுக்கு இந்த வருடம் கொஞ்சம் அதிர்ச்சியானதாக இருக்கிறது. ஏற்கனவே தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் கோலிவுட்டில் அதிகரிக்க தற்போது இன்னொரு முக்கியமான விஷயம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
அஜித்தின் 63வது படத்தை தெலுங்கின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தனுஷின் குபேரா திரைப்படத்தை தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தை இயக்குனர் சேகர் கமுலா இயக்க இருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக தமிழில் முன்னணி நடிகர்கள் படத்தை தெலுங்கு நிறுவனங்கள் தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க: சோ சொன்னதை கேட்டு அரசு விருதை வாங்க மறுத்த கண்ணதாசன்!.. காரணம் இதுதான்!..
இந்த வகையில் தற்போது கோலிவுட்டின் டாப் இயக்குனர்களையும் தெலுங்கு நடிகர்கள் தட்டிச் செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பிரம்மாண்டம் சங்கர் ஏற்கனவே ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அடுத்து அட்லீ இயக்கத்தில் உருவாக இருக்கும் ஆறாவது திரைப்படத்தை அல்லு அர்ஜுன் நடிப்பில் அனிருத் இசையில் உருவாக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வரும் எனவும் ஒரு தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘குடி’னா ஆண், பெண் இருவருக்கும் சமம்! ஏதோ சொல்லப் போய் வசமாக சிக்கிய விஜய் ஆண்டனி
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது. ஏற்கனவே முன்னணி நடிகர்களை தங்கள் படங்களில் தெலுங்கு நிறுவனங்கள் தொடர்ச்சியாக புக் செய்து அதிர்ச்சி கொடுத்தது.
தமிழ் நிறுவனங்கள் ஒதுங்க நடிகர்கள் வாங்கும் பெத்த சம்பளமே காரணமாகவும் சொல்லப்பட்டது. அந்த சம்பளத்தினை தெலுங்கு நிறுவனங்கள் கொடுக்க ஓகே சொல்லிவிடுகின்றனர். கடந்த வருடம் கோலிவுட் 3000 கோடிக்கு அதிகமாக வியாபாரம் செய்ததாகவும் இந்த வருடம் அந்த வருமானத்தில் மிகப்பெரிய தொய்வு ஏற்படும் எனவும் விவரம் அறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிசுக்கப்படுகிறது.