Categories: latest news

ஒன்னு இல்ல மூணு… கோலிவுட்டின் மூன்று பிரம்மாண்டங்களை வளைத்து தூக்கிய அக்கட தேசம்!…

Kollywood: கொடிக்கட்டி பறந்துவந்த கோலிவுட்டுக்கு இந்த வருடம் கொஞ்சம் அதிர்ச்சியானதாக இருக்கிறது. ஏற்கனவே  தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் கோலிவுட்டில் அதிகரிக்க தற்போது இன்னொரு முக்கியமான விஷயம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் 63வது படத்தை தெலுங்கின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தனுஷின் குபேரா திரைப்படத்தை தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தை இயக்குனர் சேகர் கமுலா இயக்க இருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக தமிழில் முன்னணி நடிகர்கள் படத்தை தெலுங்கு நிறுவனங்கள் தயாரித்து வருகிறது.

இதையும் படிங்க: சோ சொன்னதை கேட்டு அரசு விருதை வாங்க மறுத்த கண்ணதாசன்!.. காரணம் இதுதான்!..

 இந்த வகையில் தற்போது கோலிவுட்டின் டாப் இயக்குனர்களையும் தெலுங்கு நடிகர்கள் தட்டிச் செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பிரம்மாண்டம் சங்கர் ஏற்கனவே ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்து அட்லீ இயக்கத்தில் உருவாக இருக்கும் ஆறாவது திரைப்படத்தை அல்லு அர்ஜுன் நடிப்பில் அனிருத் இசையில் உருவாக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வரும் எனவும் ஒரு தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ‘குடி’னா ஆண், பெண் இருவருக்கும் சமம்! ஏதோ சொல்லப் போய் வசமாக சிக்கிய விஜய் ஆண்டனி

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது. ஏற்கனவே முன்னணி நடிகர்களை தங்கள் படங்களில் தெலுங்கு நிறுவனங்கள் தொடர்ச்சியாக புக் செய்து அதிர்ச்சி கொடுத்தது.

தமிழ் நிறுவனங்கள் ஒதுங்க நடிகர்கள் வாங்கும் பெத்த சம்பளமே காரணமாகவும் சொல்லப்பட்டது. அந்த சம்பளத்தினை தெலுங்கு நிறுவனங்கள் கொடுக்க ஓகே சொல்லிவிடுகின்றனர். கடந்த வருடம் கோலிவுட் 3000 கோடிக்கு அதிகமாக வியாபாரம் செய்ததாகவும் இந்த வருடம் அந்த வருமானத்தில் மிகப்பெரிய தொய்வு ஏற்படும் எனவும் விவரம் அறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிசுக்கப்படுகிறது.

Akhilan

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

1 hour ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago