Connect with us

Cinema News

விஜய்யே கேட்டாலும் அந்த விஷயத்துக்கு நோ சொல்லிடுவேன்!.. மாஸ் காட்டிய கேபிஒய் பாலா.. நீடிக்குமா?..

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. கொரோனா காலத்தில் இருந்து மக்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வரும் கேபிஒய் பாலா சமீப காலமாக ஆம்புலன்ஸ் வாங்கி தருவது, ஆட்டோ வாங்கி தருவது, இரு சக்கர வாகனம் வாங்கி தருவது என வள்ளலாக மாறி வருகிறார்.

யாருமே தனக்கான ஆதாயம் இல்லாமல் எந்தவொரு உதவியும் செய்ய மாட்டார்கள் என்றும் பாலாவுக்கு பின்னாடி யாரோ இருந்து அவரை இயக்குகின்றனர் என்றும் ஏதோ ஒரு கட்சியில் பாலா இணையப் போகிறார் என தொடர்ந்து பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றனர் முடிந்த வரை தன்னுடைய சொந்த காசுல மட்டும் தான் உதவிகளை செய்து வருகிறேன் என்றும் எந்த அரசியல் கட்சியிலும் தான் இல்லை என பல முறை பாலா கூறி விட்டார்.

இதையும் படிங்க: ரிலீஸ் தேதிக்கே ஆப்பு!.. ஆடிப்போன வெங்கட்பிரபு!.. கோட் படத்திற்கு வந்த சிக்கல்!..

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நலத்திட்ட உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளார் பாலா. நடிகர் ராகவா லாரன்ஸும் மாற்றம் எனும் அமைப்பை உருவாக்கி பெரிய அளவில் ஒவ்வொரு ஊருக்கும் டிராக்டர் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கூட ராகவா லாரன்ஸ் அம்மா உதவி செய்வது நல்லது தான். ஆனால், எந்த காரணத்துக்காகவும் அரசியலாக இதை மாற்றி விடாதே என ராகவா லாரன்ஸிடம் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: ‘பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்…’ அது தான் இளையராஜா..!

ஆனால், கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ராகவா லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா இணையப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், சென்னை பல்லாவாரத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாவிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்க, நடிகர் விஜய் அழைத்தால் கூட அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் ஏனென்றால் அரசியல் பற்றி தனக்கு எந்த அறிவும் கிடையாது என்றும் உதவி தான் தெரியும் பதவின்னா என்னன்னு எனக்கு தெரியாது என பேசியுள்ளார்.

சர்கார் படம் வரைக்கும் கூட நடிகர் விஜய் அரசியலுக்கு வரமாட்டேன் என்று தான் சொல்லி வந்தார். ஆனால், தற்போது அரசியல் தலைவராக மாறியுள்ளார். பாலாவும் கூடிய சீக்கிரம் மாற வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

இதையும் படிங்க: எல்லா பட்டனையும் கழட்டி நிக்குறாரே!… நம்ம பாரதி கண்ணம்மாவா இது!.. போட்டோஸ் அள்ளுது!..

google news
Continue Reading

More in Cinema News

To Top