‘காஞ்சனா 4’ல் இப்படி ஒரு கேரக்டரா? மாற்றம் சேவையால் மாறிப் போன பாலாவின் கெரியர்

by Rohini |
bala
X

bala

KPY Bala: ஒரு அடிமட்ட நிலையில் இருந்து வந்து இன்று அனைவரும் பிரமித்து பார்க்கக்கூடிய நப ராக இருந்து வருபவர் கே பி ஒய் பாலா. சின்ன திரையில் கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் முதன்முதலாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பாலா அந்த நிகழ்ச்சியில் சில பல நகைச்சுவை திறமைகளை காட்டியதன் மூலம் விஜய் டிவியில் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார்.

அதில் இருந்து அனைத்து காமெடி ஷோக்களிலும் பாலாவை பார்க்க முடிந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மேலும் பாலாவின் திறமையை மெருகேற்றிய நிகழ்ச்சியாக அமைந்தது. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு பாலாவுக்கு கிடைத்தது. சொற்ப தொகையை சம்பளமாக பெற்றுக் கொண்டிருக்கும் போதே பாலா முடிந்த அளவு அனைவருக்கும் உதவிகளை செய்து வந்தார்.

இதையும் படிங்க: இளையராஜாவை மிரட்டி கல்யாணத்திற்கு வர வச்சேன்!.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!…

5000 சம்பளத்திலேயே பல உதவிகளை செய்து வந்த பாலா அவருடைய கெரியரும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே போக இந்த பக்கம் பல பேருக்கு உதவிகள் செய்யும் எண்ணமும் வளர்ந்து கொண்டே போனது. அதனால் தனக்கு என எதையும் வைத்துக் கொள்ளாமல் கிடைக்கிற சம்பளத் தொகையை அப்படியே மற்றவர்களுக்கு உதவி செய்வதில் செலவழித்து வருகிறார் பாலா.

அதுவும் கொரோனா காலத்தில் இவருடைய அந்த பெருந்தன்மை வெளியில் தெரியவர பல பிரபலங்கள் இவரை பாராட்டி வந்தனர். குறிப்பாக லாரன்ஸ் இவரை அழைத்து மனதார பாராட்டினார். அது மட்டுமல்லாமல் பாலாவையும் தன்னுடன் இணைத்து கொண்டார் லாரன்ஸ். இப்போது மாற்றம் சேவையின் மூலம் பாலாவும் லாரன்ஸூம் சேர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அமீர் பிரச்சினையில் சூர்யாவின் அமைதிக்கு காரணம்! குடும்பமே சேர்ந்து கமுக்கமா இருந்தது இதுக்குத்தானா?

இந்த நிலையில் இன்று ஒரு ஹோட்டல் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலாவிடம் பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகளை கேட்டனர் .அப்போது காஞ்சனா4ல் நீங்கள் எந்த கேரக்டரில் நடிக்கிறீர்கள்? என ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த பாலா காஞ்சனா 4ஐ முதல் ஆளாக பார்க்க வேண்டும் என்ற ஒரு கேரக்டரில் நான் இருக்கிறேன் என தமாஷாக பதில் கூறினார்.

மேலும் காஞ்சனா 4 படத்தில் லாரன்ஸ் தான் நடிக்கிறார் . நான் நடிப்பதை பற்றி லாரன்ஸ் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பாலா கூறினார். மேலும் பாலாவின் இந்த உதவியை பற்றி ஒரு சில பேர் விமர்சித்தும் வரும் நிலையில் இதற்கு பதிலளித்த பாலா இவர் உதவி செய்கிறானா என்று பார்க்காமல் இவன் எல்லாம் உதவி செய்கிறானா என்று தான் ஒரு சில பேர் என்னை கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: அமீர் பிரச்சினையில் சூர்யாவின் அமைதிக்கு காரணம்! குடும்பமே சேர்ந்து கமுக்கமா இருந்தது இதுக்குத்தானா?

ஆனால் அதைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வருகிற 100 குறுஞ்செய்தியில் 98 குறுஞ்செய்தி நல்லதாகவே அமைகிறது. அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் என்னை விமர்சிப்பதற்கு மக்களே கமெண்ட்கள் மூலமாக பதிலடி கொடுத்து விடுகிறார்கள். அதனால் அந்த வேலையும் எனக்கு மிச்சம். என்னுடைய எண்ணம் இன்னும் பல பேருக்கு உதவி செய்ய வேண்டும் அவ்வளவுதான் என கூறி இருக்கிறார் பாலா.

Next Story