Categories: Cinema History Cinema News latest news

சிவாஜியுடன் இத்தனை படங்களா? பத்மினியை விட அதிக ஸ்கோர் செய்த நடிகை யார் தெரியுமா?

Actor Sivaji: வரலாற்றில் வீரசிவாஜியை எப்படி நாம் காலங்காலமாக நினைவு கூர்ந்து வருகிறோமோ அதே போல தமிழ் திரையுலகிலும் நடிகர் திலகம் சிவாஜியின் நினைவலைகளோடு நம் வாழ்க்கை பயணப்பட்டு வருகிறது. அந்தளவுக்கு சினிமாவில் சாதனை படைத்திருக்கிறார் சிவாஜி கணேசன்.

சிவாஜியின் படங்களை பார்த்து சினிமாவிற்கு வந்தவர்கள் ஏராளம். அவரின் நடிப்பை பார்த்து பார்த்து தன்னைத் தானே வளர்த்துக் கொண்டவர்கள்தான் இன்று சினிமாவில் அதிகமாக இருக்கின்றனர்.  வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரங்களை தன் படங்களின் மூலம் கண்முன் நிறுத்தியவர் சிவாஜி.

இதையும் படிங்க : பெரிய மனச பெரிய இடத்துல மட்டும் காட்டினா போதாது.. விஜய்யை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்..

வீரபாண்டிய கட்டபொம்மன் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்ற உணர்வை அவர் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இருந்து நம்மால் உணர்ந்த முடிந்தது.  இதே போல் எண்ணற்ற கதாபாத்திரங்களை நமக்காக படைத்திருக்கிறார்.

sivaji1

இந்த நிலையில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகைகளை பற்றி ஓரளவுக்கு நமக்கு தெரிந்திருக்கும். எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதாதான் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 28 படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஜெயலலிதா.

இதையும் படிங்க : புஷ்பா 2 படத்துக்கு வந்த மெகா ஆஃபர்! – ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா?… தலையே சுத்துது!..

அவருக்கு அடுத்தப் படியாக 26 படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி ஜோடியாக நடித்திருப்பார். இதே போல் சிவாஜியுடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்தது பத்மினிதான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். மேலும் அந்த காலத்தில் சிவாஜி மீது பத்மினிக்கு ஒரு வித காதல் இருந்ததாகவும் செய்திகள் வந்தது.

ஆனால் பத்மினியை விட சிவாஜியுடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்தது கே.ஆர்.விஜயாவாம். கே.ஆர்.விஜயாவும் சிவாஜியும் 41 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்களாம். அதில் 31 படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம். அதே போல் பத்மினியும் சிவாஜியும் 39 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்களாம். அதில் 30 படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம்.

இதையும் படிங்க : செட்டை கூட வித்து காசாக்கிய லலித்… கணக்கு செமையா இருக்கே! அசந்த விஜயின் திடீர் முடிவு!

Published by
Rohini