விஜய் அஜித் மாதிரி ஆக நினைச்சேன்... தலையில் தட்டி அனுப்பிட்டாங்க!.. நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்த கொடுமை…

by Rajkumar |   ( Updated:2023-07-04 02:04:32  )
விஜய் அஜித் மாதிரி ஆக நினைச்சேன்... தலையில் தட்டி அனுப்பிட்டாங்க!.. நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்த கொடுமை…
X

தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்கிற ஆசை சினிமாவில் பலருக்கும் இருக்கலாம். ஆனால் அனைவராலும் அப்படி சினிமாவில் ஆக முடிவதில்லை. சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒரு சிலர் மட்டுமே கதாநாயகன் ஆகின்றனர்.

அப்படி சினிமாவில் நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கிருஷ்ணா. இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியான நடிகர் கிருஷ்ணா தமிழ் சினிமாவிற்கு நடிக்க வரும்போதே கதாநாயகன் ஆக வேண்டும் என்கிற ஆசையில்தான் இருந்தார்.

actor krishna1

actor krishna1

முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு அலிபாபா என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் கிருஷ்ணா. இந்த படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. படு தோல்வி கண்டது. அதன் பிறகு கற்றது களவு என்கிற திரைப்படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: என்னது.. நடிகை ஸ்வர்ணமால்யா பற்றிய கிசு..கிசு.. பேச்சு… உண்மையா?

கிருஷ்ணா செய்த புது முயற்சி:

இந்த படமும் நல்ல வெற்றியே தரவில்லை. மூன்றாவதாக கழுகு திரைப்படத்தில் நடித்தார். கழுகு திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வெற்றியை பெற்று தந்தது. அதற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்கிற பேய் படத்தில் நடித்தார் கிருஷ்ணா அதுவும் ஓரளவு ஓடியது.

actor krishna2

actor krishna2

ஆனால் அதுவரை வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து வந்த கிருஷ்ணா, பிறகு அஜித் விஜய் மாதிரி மாஸ் ஹீரோவாக ஆனால் என்ன? என யோசித்தார். அதனை தொடர்ந்து வானவராயன் வல்லவராயன், வன்மம், யட்சன், யாக்கை போன்ற ஆக்‌ஷன் படங்களாக நடித்தார்.

அதனால் சினிமாவில் பெரும் தோல்வியை கண்டார் கிருஷ்ணா. இதுக்குறித்து ஒரு பேட்டியில் கூறும்போது நானும் கமர்ஷியல் ஹீரோ ஆகலாம்னு பார்த்தேன், மக்கள் தலையில் தட்டி அனுப்பிட்டாங்க என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வயித்துல குழந்தை.. விட்டுச்சென்ற கணவர்! மனோரமா எடுத்த துணிச்சலான முடிவு

Next Story