எம்.ஜி.ஆரின் இசை ஞானத்தை பார்த்து மிரண்டு போன இசை அமைப்பாளர்!. எல்லா ஏரியாவிலும் அவர் கில்லி..

Published on: May 13, 2024
mgr
---Advertisement---

எம்.ஜி.ஆர் நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த தொழில்நுட்ப கலைஞரும் கூட. அவருக்கு கேமர கோணங்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாமே அத்துப்படி. அதற்காக முறையான பயிற்சியையும் அவர் பெற்றிருக்கிறார். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் என 2 சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

இந்த இரண்டு படங்களையும் அவர் உருவாக்கிய விதத்தை பார்த்தாலே அவர் எப்படிப்பட்ட திறமைசாலி என்பதை உணர்ந்துகொள்ள முடியும். சில சமயம் படப்பிடிப்புக்கு இயக்குனர் வர தாமதமானால் அவரின் அனுமதியோடு காட்சிகளை எம்.ஜி.ஆரே இயக்கி விடுவார். ஒளிப்பதிவாளர்களுக்கே கேமரா கோணங்களை சொல்லி கொடுப்பார்.

இதையும் படிங்க: விஜயின் மகள் பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா? ஷோபா சொன்ன ஹார்ட் டச்சிங் தகவல்

அதேபோல்தான் இசையிலும் அவருக்கு நல்ல ஞானம் உண்டு. தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பார். ஏனெனில், தனது படங்களில் பாடல்களுக்கு முக்கியத்தும் உண்டு என்பதை உணர்ந்தவர் அவர். பாடல்கள் மூலமே தன்னை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அவர்.

எனவே, பாடல் உருவாக்கத்தின் போது அவரே இசையமைப்பாள் முன் அமர்வார். எம்.ஜி.ஆரை திருப்திபடுத்துவது மிகவும் கடினம். எம்.ஜி.ஆரிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் படாத பாடு பட்டிருக்கிறார். சில சமயம் 30 மெட்டுகளுக்கும் போல் போட்டு காட்டுவார். அதில் ஒன்றை எம்.ஜி.ஆர் தேர்வு செய்வார். அதேபோல், தான் நடிக்கும் படங்களில் பாடல் வரிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் உறுதியாக இருப்பார்.

இதையும் படிங்க: போட்ட மொத்த ஆல்பமும் ஹிட்! ஆனா ஆளோ அவுட்.. தன்னடக்கத்தால் காணாமல் போன இசையமைப்பாளர்

எம்.ஜி.ஆரின் இசைஞானம் எந்த அளவுக்கு எனில் இசையமைப்பாளர்களுக்கே கருத்துக்களை சொல்லுவார். கர்நாடக இசையிலும் அவருக்கு ஞானம் உண்டு. நவரத்தினம் படத்தில் இடம் பெற்ற ‘குருவிக்கார மச்சானே பாடலில் மேற்கத்திய, ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையும் கலந்து உருவானது. இந்த படத்திற்கு இசையமைத்தவர் வயலின் வித்தகர் குன்னக்குடி வைத்தியநாதன்.

மற்ற சங்கீதங்களுக்கும் அடிப்படைய கர்நாடக இசைதான் என சொல்லும்படி அந்த பாடல் அமைய வேண்டும் என சொன்ன எம்.ஜி.ஆர், ஒரு பிரபலமான ஹாலிவுட் பாடலை சொல்லி அதோடு ஒத்துப்போகும் படி கீர்த்தனை அமைந்தால் கர்நாடக சங்கீகத்தின் மதிப்பு புரியும் என சொன்ன எம்.ஜி.ஆர் my fair lady மற்றும் Sound of music ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்களையும் மேற்கோள் காட்டி அது போல வரவேண்டும் என சொல்ல எம்.ஜி.ஆரின் இசை அறிவை கண்டு குன்னக்குடி வைத்தியநாதன் அசந்து போய்விட்டாராம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.