Cinema News
லால் சலாம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லையா?.. ரஜினிகாந்த் மகளால் அப்செட்டான லைகா நிறுவனம்?..
லைகா தயாரிப்பில் இந்த ஆண்டு அருண் விஜய் நடித்த வெளியான மிஷன் சப்டர் ஒன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிவிட்டது. லால் சலாம் படத்துடன் வெளியான லவ்வர் படம் வரை ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிட்டது.
மேலும், மஞ்சுமெல் பாய்ஸ், ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் வெளியான படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், பிப்ரவரி மாதம் வெளியான லால் சலாம் திரைப்படம் இன்னமும் எந்த ஒரு ஓடிடியிலும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா செய்யும் சூப்பர் விஷயம்!.. ஊரு கண்ணே பட்டுடும்! .. என்னவொரு வெறித்தனம்!..
நெட்பிளிக்ஸ் நிறுவனம் லால் சலாம் படத்தை வாங்கி வெளியிடும் முடிவில் இருந்தாலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறிய அந்த தொலைந்த ஹார்ட் டிஸ்க்கில் உள்ள காட்சிகள் மீட்கப்பட்டு கொடுக்கப்பட்டால் மட்டுமே பெரிய தொகை கொடுத்து லால் சலாம் படத்தை வாங்கி ஓடிடியில் வெளியிடுவோம் என லைகா நிறுவனத்திற்கு நெட்பிளிக்ஸ் செக் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேட்டையன் படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்யும்போது கூடவே சேர்த்து இலவச இணைப்பாக லால் சலாம் படத்தை தள்ளி விட்டு விடலாம் என்கிற முடிவுக்கு லைகா நிறுவனம் வந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: தலைவர் 171 படத்தின் கதை இதுதான்… ரசிகனுக்காக ரஜினி செய்யப் போகும் தரமான சம்பவம்..
ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் கஷ்டப்பட்டு நடித்த காட்சிகள் எல்லாம் ஒரு ஹார்ட் டிஸ்க் தொலைந்தால் காணாமல் போய்விட்டது என்றும் படமே அதனால் தான் சொதப்பியது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருட்டியது தற்போது அவருக்கு எதிராகவே சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.
இப்போதைக்கு ஓடிடியில் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடித்த லால் சலாம் படத்தை ரசிகர்கள் காண முடியாது என்றும் ஒருமுறையாவது ஓடிடியில் வந்தவுடன் லால் சலாம் படத்தை பார்க்கலாம் என நினைத்தவர்களையும் ஏமாற்றி விட்டார் ரஜினி மகள் என கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை தனது வாரிசாக அறிவிக்க ஆசைப்பட்ட நடிகர்!.. ஆனால் நடக்காமல் போன சோகம்!..