பாட்டி வடை சுட்ட கதையை 10 எபிசோட் எடுத்த மாதிரி இருக்கு!.. லால்சலாமை கலாய்த்த பிரபலம்...

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் லால் சலாம். இதற்கு பல்வேறு தரப்பினர்கள் மத்தியில் வரவேற்பு ஒரு பக்கம் வருகிறது. மற்றொரு பக்கம் கலவையான விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. படத்தைப் பற்றி பிரபல சினிமா விமர்சகர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார்னு பார்ப்போமா...

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்த படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இதையும் படிங்க... நடிக்கும்போது அசிங்கப்பட்ட சூர்யா!.. இனிமே நடிப்பே வேண்டாம் என முடிவெடுத்த அந்த தருணம்…

இந்தக் காலகட்டத்தில் இந்து, முஸ்லிம் பிரச்சனைகள், மதக்கலவரங்கள், கோவில்களை வச்சி வம்பு இழுக்கற அரசியலும் நிறைய ஓடிக்கிட்டு இருக்கு. இந்த சமயத்துல இந்தப் படம் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தப் படத்தில் முதல் பாதி கதைல என்ன சொல்ல வர்றாங்கங்கறதே தெரியல. கிரிக்கெட் தான் படம் முழுவதும் அடிக்கடி வருது. அதே போல ரஜினிகாந்த் வர்ற சீன்களும் அப்ளாஸ் அள்ளுது. படத்தில கேமியோ ரோல்னாலும் அவர் தான் பாதிபடத்தை ஆக்கிரமிச்சிருக்காரு.

அதே போல தேர் திருவிழாவும் அதிகமாக காட்டப்படுது. ரஜினியை டானாகவும், டெக்ஸ்டைல்ல பெரிய ஆளாகவும் காட்டறாங்க. ஆனா டானா காட்டுறதுக்கு ஒரு காட்சி இருக்கு. டெக்ஸ்டைல்ல பெரிய ஆள்னு காட்ட சீன் இல்லை. கள்ளக்குறிச்சில தான் படத்தோட கதை ஆரம்பிக்குது. ஆனா அந்த வட்டார பாஷை ஒரு இடத்துல கூட இல்லை.

இதையும் படிங்க... உன்ன பாத்தாலே பொழப்பு ஓடாது!.. ஜாக்கெட் பாவாடையில் கிறங்க வைக்கும் பூஜா ஹெக்டே..

அதே மாதிரி ஒரு படத்துல வில்லன் கேரக்டர் தான் வெயிட்டா இருக்கணும். இந்தப் படத்துல அவரு சப்போர்ட்டிங் ரோல் மாதிரி வந்துட்டுப் போறாரு. வில்லன் நல்லவனா கெட்டவனான்னு காட்டி கடைசில வில்லனா காட்டுறாங்க. இந்தப் படத்துல இடையில வடமாவட்டங்கள்ல கூத்து வேஷம் போடுவாங்க. அது மாதிரி ஒரு கேரக்டர். காந்தாரால வர்ற மாதிரி ஒரு வேடத்தை அடிக்கடி காட்டுறாங்க.

இதை ஏன் சேர்த்தாங்கன்னு தெரியல. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையில் திருவிழாவிற்கான நாதஸ்வரம் வாசிக்கவில்லை. பாடல்கள் செம மாஸ். பாட்டி வட சுட்டதை 10 எபிசோட் எடுத்தா எப்படி இருக்குமோ அப்படி எடுத்துருக்காங்க. கதை இன்னைக்குத் தேவையானது.

இவ்வாறு பிரபல திரை ஆய்வாளரும், யூடியூப் விமர்சகருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story