நடிக்கும்போது அசிங்கப்பட்ட சூர்யா!.. இனிமே நடிப்பே வேண்டாம் என முடிவெடுத்த அந்த தருணம்...

Actor Surya: தமிழ் சினிமாவில் இன்று ஒரு டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி அனைவரையும் மிஞ்சும் நடிகராக சூர்யா திகழ்ந்து வருகிறார். இப்பேற்பட்ட திறமைசாலியான சூர்யா நடிப்பின் மீது முதலில் ஆர்வம் காட்டாமல் தான் இருந்துள்ளார்.

படிக்கும் போதே தான் ஒரு தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசையில் தான் இருந்தாராம் சூர்யா. அதுமட்டுமில்லாமல் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த ஆர்வி உதயகுமார் வீடும் சிவக்குமார் வீடும் அருகருகே இருந்ததனால் இரு வீட்டுக்கும் நல்ல நெருக்கம் இருந்து வந்துள்ளது.

இதையும் படிங்க: விடிய விடிய பாத்தாலும் வெறி குறையாது!.. தூக்கலா காட்டி அசர வைக்கும் யாஷிகா….

அதன் காரணமாகவே சூர்யாவை எப்படியாவது சினிமாவிற்குள் கொண்டு வர வேண்டும் என உதய குமார் எண்ணியிருக்கிறார். அதை சூர்யாவிடமும் தெரிவித்திருக்கிறார். அப்போது சூர்யா தான் ஒரு தொழிலதிபராகத்தான் வேண்டும் என நினைத்தாராம்.

சினிமாவே வேண்டாம் என சூர்யா நினைத்ததன் பின்னனியில் ஒரு சம்பவமே நடந்திருக்கிறது. ஒன்று தன் முகத்தோற்றம் நன்றாக இல்லை என்று கருதியிருக்கிறார். தன்னை விட அழகானவர்களுக்கே சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வில்லை. அப்புறம் எப்படி நமக்கு கிடைக்கும் என எண்ணியிருக்கிறார் சூர்யா.

இதையும் படிங்க: ஒருத்தர் கூட வாங்கலயே!.. லால் சலாம் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா?!.. ஐயோ பாவம்…

மற்றொரு காரணம் அவர் படிக்கும் போது ஒரு நாடகம் ஒன்றை அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள். அதில் சூர்யா ஏற்று இருந்த கதாபாத்திரம் எமதர்மன். சித்திரக்குப்தர் பேசி முடித்ததும் எமதர்மன் பி.எஸ். வீரப்பா மாதிரி கம்பீரமாக சிரிக்க வேண்டுமாம். ரிகர்சலில் எப்படியோ சூர்யா சமாளித்து விட்டாராம்.

ஆனால் மேடையில் எமதர்மன் கெட்டப்பில் சூர்யா சிரிக்க வெளியே வந்ததோ பூனையின் குரலில் சத்தமாக வெளி வந்திருக்கிறது. சூர்யா சிரித்ததும் அதை பார்த்த அனைவரும் சிரித்து விட்டார்களாம். உடனே நாடகத்தை ஏற்பாடு செய்தவர் சூர்யாவை கீழே இறங்க சொல்லி அதே கெட்டப்பில் வேறொருவரை நடிக்க வைத்தாராம். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் இனி நடிக்கவே கூடாது என நினைத்தாராம் சூர்யா.

இதையும் படிங்க: காதலர்கள் கொண்டாடும் வெற்றி!.. 2ம் நாளில் அதிகரித்த லவ்வர் வசூல்!.. இந்த வாரம் வின்னர் இதுதான்!..

 

Related Articles

Next Story