விஜயின் அடுத்த இயக்குனர் அக்கட தேசம் தான்… இதுல கூட அரசியல் பண்றீங்களே பாஸ்!

by Akhilan |
விஜயின் அடுத்த இயக்குனர் அக்கட தேசம் தான்… இதுல கூட அரசியல் பண்றீங்களே பாஸ்!
X

Vijay: தற்போது ரசிகர்களிடம் இருக்கும் ஓயாத கேள்வி எது எனக் கேட்டால் யாரு தான் விஜயின் 69வது படத்தினை இயக்க போகிறார் என்பதாக தான் இருக்கும். அதற்கு ஒருவழியாக விடை கிடைத்து விட்ட நிலையில் சில ஆச்சரிய தகவல்களும் அதற்கு பின்னால் இருக்கிறதாம்.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். கிட்டத்தட்ட தற்போது டாப் லிஸ்டில் இருக்கும் விஜய் தான் அதிகபட்ச சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார். அவரின் சமீபத்திய திரைப்படமான லியோ நல்ல வசூலை பெற்றாலும் சில விமர்சனங்களையும் சந்தித்தது. அதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு ஏகத்தில் டிகிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் த டைம் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: நீங்கள் சொல்வது அநியாயம்!.. எம்.ஜி.ஆரிடம் எகிறிய வாலி!.. பாலச்சந்தரை பற்றி இப்படி சொல்லிட்டாரே!..

இப்படத்தில் அப்பா, மகன் என இருவே இடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விஜயின் இளமை தோற்றத்திற்காக டிஏஜிங் தொழில்நுட்பமும் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் சமீபத்தில் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்தார். அப்போது அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் எனவும் அறிவித்திருந்தார்.

இதனால் கோட் படத்திற்கு பின்னர் தளபதி 69ல் மட்டுமே விஜய் நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது. அதிலும் அப்படத்தை யார் இயக்குவார் என்ற சர்ச்சை இன்னுமும் கோலிவுட்டில் நிலவி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி வெற்றிமாறன், அட்லீ என பல இயக்குனர்கள் பட்டியலில் இருந்தனர். ஆனால் அந்த இடத்தை தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் பிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: அவர் இல்லனா நான் இல்ல!.. வாலிக்கு தக்க சமயத்தில் உதவிய பாடகர் பற்றி தெரியுமா?…

இதனால் அவர்கள் விஜயின் படத்தை இயக்க முடியாத நிலையில் உள்ளனர். இன்னொரு புறம் த்ரிவிக்ரம் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருந்து கூட அவர் ஓகே சொல்லி இருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் உலா வருகிறது. விரைவில் இதற்கு ஒரு தீர்வு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story