விஜய் அண்ணா ரூட்ல தான் நானும் ஃபாலோ பண்றேன்... அவர்கிட்ட போய் ஹெல்ப்?... மனம் திறந்த விக்ராந்த்..!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார். என்னதான் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்று அடையாளத்துடன் சினிமாவிற்குள் அறிமுகமாகி இருந்தாலும், பல உருவ கேலிகள், கிண்டல்கள், அவமானங்களை தாண்டி படிப்படியாக முன்னேறி இந்த இடத்திற்கு வந்திருக்கின்றார்.
தற்போது வரை தமிழ் சினிமாவில் 68 திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அடுத்ததாக சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் வருகிற 2026 தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றார். நடிகர் விஜயின் தம்பி என்றால் பலருக்கும் தெரியும் அது நடிகர் விக்ரான் தான் என்று, அதாவது நடிகர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகரின் தங்கை ஷீலாவின் மகன் விக்ராந்த். நடிகை ஷீலாவும் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தற்பொழுது சீரியல்களில் நடித்து வருகின்றார். இவரது மகன் விக்ராந்த் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்த போதிலும் இவருக்கு அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவர் கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் சுமாரான வெற்றியை தான் கொடுத்தது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டுதான் இருக்கின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசியிருந்த அவர் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அந்த பேட்டியில் தொகுப்பாளர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கின்றார். நீங்கள் அவரிடம் உதவி கேட்டு இருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த விக்ராந்த் "தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் அண்ணன் விஜய் இந்த இடத்திற்கு வந்திருக்கின்றார்.
அவரை நான் பாலோ பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். எந்த ஒரு உதவியும் இல்லாமல் என்னுடைய திறமையால் நான் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். சினிமாவை தாண்டி குடும்பம் சம்பந்தமாக பல உதவிகளை அண்ணன் விஜய் செய்திருக்கின்றார். ஆனால் சினிமாவில் அவரிடம் உதவி கேட்டு நிற்க வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை, கட்டாயம் நான் கேட்டிருந்தால் அவர் செய்திருந்திருப்பார். ஆனால் அப்படி நான் செய்ய மாட்டேன்" என்று விக்ராந்த் அந்த பேட்டியில் பேசியிருந்தார்