நீங்க நினைக்கிற மாதிரி இல்ல... தனுஷ் விஷயத்தில் நடந்தது இதுதான்... பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

by ராம் சுதன் |

தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்குள் இணக்கமான சூழல் உருவாகவில்லை. அவர்கள் போன் எடுத்தாலே நடிகர்கள் எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுக வேண்டும் என்றும் மறைமுகமாக சொல்கிறார்கள்.

அதற்கு ரெட்கார்டு போடுவதாகத் தான் அர்த்தம். தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிவிட்டு நடிக்காமல் வேறு படத்துக்குச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் பல நடிகர்களுக்கு ரெட்கார்டு போட்டுள்ளார்கள். அவர்களில் தனுஷூம் ஒருவர். இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி என்ன சொல்கிறார்னு பார்ப்போமா...

தனுஷ் விஷயத்தில் அவர் என்னம்மோ பல தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றுற மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அது பொய். அவர் இரண்டு தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார்.

ஒண்ணு கதிரேசன். இன்னொன்னு ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி. இதுல கதிரேசன் கிட்ட அட்வான்ஸ் வாங்கினாரு. தனுஷ் இன்னும் டேட் கொடுக்காம இருக்காருங்கறது உண்மை தான்.

அதே நேரத்துல முரளி கிட்டயும் அட்வான்ஸ் வாங்கினாரு. அவரு விஷயத்துல நடந்ததே வேற. படத்தை இவரு தான் பர்ஸ்ட் காப்பி பண்றாரு. அவருக்கிட்ட இருந்து 5 கோடி வந்ததுக்குப் பிறகு படத்தை இவர் தான் ஸ்டார்ட் பண்றாரு.

நாகார்ஜூனா அந்தப் படத்துல நடிக்கிறாரு. சூட்டிங் 70 சதவீதம் முடிக்கிறாரு. அடுத்தடுத்த பேமண்ட் வரவே இல்லை. அவருக்கிட்ட இருந்து சம்பளமும் வரல. ஒரு கட்டத்துல பணமும் வரலன்னதும் தனுஷ் அந்தப் படத்தை ஸ்டாப் பண்றாரு. இதுதான் நடந்தது.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து தனுஷ் ஏதோ அவங்ககிட்ட பணம் வாங்கிட்டாருங்கற மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துறது ஒரு தவறான விஷயம். அந்தத் தவறை இப்போ தயாரிப்பாளர்கள் சங்கம் பண்ணியிருக்காங்க. விஷால் மீதும் குற்றச்சாட்டு வந்தது. அவர் 2017-19 காலகட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தார்.

அப்போ அவர் ஒரு சில விஷயங்களைப் பண்ணுகிறார். தமிழ் ராக்கர்ஸ் யாருன்னு கண்டுபிடிக்கணும், நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்றது போன்ற வேலைகளைச் செய்கிறார்.

அதுல 12 கோடியை இவரே எடுத்துப் போய்விட்டார்னு குற்றச்சாட்டு வந்தது. சினிமா போல இங்கும் அரசியல் வந்ததாக அவர் சொல்கிறார். அப்படின்னா எப்படி நீங்க உதயநிதியை சொல்லப்போச்சுன்னு இப்படி ஒரு விஷயத்தைப் பண்றாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story