நான் மெண்டல் ஆயிட்டனோன்னு பயமா இருக்கு!.. பார்த்திபனுக்கு என்னாச்சி?!...
இயக்குனர் பாக்கியராஜிடம் சினிமா கற்றவர் பார்த்திபன். அவரின் பல படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தவர். புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட். இந்த படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார்.
சீதாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். 2 குழந்தைகளு பிறந்தன. ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். வித்தியாசமாக யோசிப்பது, வித்தியாசமாக பேசுவது, வித்தியாசமான கதைகளை இயக்குவது என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் பார்த்திபன்.
உள்ளே வெளியே போன்ற ஹிட் படங்களை கொடுத்தாலும் சுகமான சுமைகள், குடைக்குள் மழை, ஹவுஸ்புல் என பரிசோதனை முயற்சிகளை செய்து நிறைய பணங்களை இழந்தவர். கமலை போல சினிமாவில் காசை விட்டாலும் சினிமாவிலேயே தொடர்ந்து நீடிக்கும் பார்த்திபன் சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே முதலீடு செய்து வருகிறார்.
சிறுவர்கள் தொடர்பான டீன்ஸ் என்கிற கதையை எழுதி இயக்கி அதில் ஒரு முக்கிய காட்சியில் நடித்தும் இருக்கிறார். இந்தியன் 2 படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் டீன்ஸ் திரைப்படமும் இன்று பல தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தை புரமோஷன் செய்யும் விதமாக பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார் பார்த்திபன்.
அதில், சீதாவுடன் ஏற்பட்ட பிரச்சனை, இப்போது ஏற்பட்டிருக்கும் பக்குவம் என எல்லாவற்றை பற்றியும் மனம் திறந்து பேசி வருகிறார் பார்த்திபன். திருமணத்திற்கு பின் சீதாவுக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. இப்போதுள்ள பக்குவம் அப்போது இல்லை’ என சொல்லி இருந்தார்.
மேலும் ‘எனக்கு ஒரு பயம் மட்டும் இப்போது இருக்கிறது. நான் மெண்டல் ஆகிட்டேனா இல்லை ஆகப்போறேனா என தெரியவில்லை. நீங்க மெண்டல் ஹாஸ்பிட்டல் போய் பாருங்க. நாம அவங்கள மெண்டலா பார்ப்போம். ஆனால், அவங்க சந்தோஷமா இருப்பாங்க. அதே மாதிரி நானும் சந்தோஷமாத்தான் இருக்கேன். ஆனால், ஒருவேளை நான் மெண்டல் ஆகிட்டேனான்னு சந்தேகமா இருக்கு’ என சொல்லி இருக்கிறார்.