More

சாரே இது கொல மாஸு!.. செம ஸ்டைலாக சிம்பு… தீயாய் பரவும் புகைப்படம்…..

100 கிலோ எடைக்கு மேல் இருந்த நடிகர் சிம்பு தனது உடலை கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்து எல்லோருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார். மேலும், 30 நாளில் ஈஸ்வரன் படத்தை முடித்து மாநாடு படத்திற்கு சென்று சுறுசுறுப்பு காட்டினார். அதன்பின் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertising
Advertising

தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் வேறு மாதிரியான தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தாடி, மீசையை வழித்து சின்னப் பையன் போல் மாறியுள்ளார் சிம்பு. சமீபத்தில் கையில் குச்சியை வைத்துக்கொண்டு அவர் நிற்கும் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதேபோல், படப்பிடிப்புகளுக்கு நடுவே தனது கேரவேனில் வெற்று உடம்புடன் செல்பி எடுத்துக்கொள்ளும் புகைப்படம் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில், மீண்டும் அவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒன்று அவரே பகிர்ந்த புகைப்படம். மற்றொன்று அவரின் கூலிங்கிளாஸ் அணிந்து நண்பர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகும். இந்த புகைப்படங்களை சிம்பு ரசிகர்கள் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts