சூர்யா மாஸ் ஹீரோவாக மாற காரணமே அந்த வில்லன் நடிகர் தானாம்...! செம ஆளா இருப்பாரு போல..!
சரவணன் என்ற இயற்பெயருடன் கூடிய நடிகர் சூர்யா தனது ஆரம்பகாலப் படங்களில் நடிக்க ரொம்பவே தடுமாறினார். 'நேருக்குநேர்' படத்தில் நடிக்கும்போது படத்தின் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஒரு பேட்டியில் இப்படி சொன்னாராம். பணக்கார நடிகர் வீட்டுல பொறந்துட்டு வராத நடிப்பை செய்யறேன்னு ஏன் நம்ம உயிரை வாங்கறானுகன்னு நினைச்சாராம்.
சூர்யாவை விட படத்தில் சிம்ரனின் நடிப்பு தான் அட்டகாசமாக இருந்தது. 97 முதல் 2001 வரை சூர்யாவுக்கு வெளியான படங்கள் எல்லாமே டல்லடித்தன. அவற்றில் பூவெல்லாம் கேட்டுப்பார், ப்ரெண்ட்ஸ் மட்டும் தான் சுமார் ரகங்கள்.
'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் இருந்து ஜோதிகா அவருக்கு பெஸ்ட் ப்ரண்ட் ஆனார். அவருடன் 'உயிரிலே கலந்தது' படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது படப்பிடிப்பு சமயம் ஒரு தரமான சம்பவம் நடந்தது. அதுதான் சூர்யாவின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
அப்போது என்ன நடந்ததுன்னு சூர்யா இப்படி சொல்கிறார். நாங்க சாலக்குடி சென்று ரயில்ல திரும்பி வந்துக்கிட்டு இருந்தோம். வழக்கமா சாப்பிட்டதும் சீக்கிரமா பெர்த்ல படுத்துடுவேன். கொஞ்ச நேரத்துல என்னை யாரோ எழுப்பினாங்க. முழிச்சிப் பார்த்தா ரகுவரன் சார் நிக்கிறாரு.
வலது கையில் கோப்பை. இடது கையில் பேப்பர். 'என்னங்கண்ணா'ன்னு கேட்டேன். 'உன்னால எப்டி சரவணா நிம்மதியா தூங்க முடியுதுன்னு கேட்டாரு. உங்க அப்பா பேரை எடுத்துட்டா நீ யாரு இங்க...? எத்தனை நாளு உங்க அப்பா நிழல்லயே இங்க சினிமால குப்பை கொட்டலாம்னு முடிவு பண்ணிருக்க?' என அமைதியாகக் கேட்டார்.
அப்போ என்னால பதில் சொல்ல முடியல. அழுகை தான் வந்தது. அவரு பாட்டுக்கு திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சிட்டாரு. ஆனா என்னால நிம்மதியா தூங்க முடியல. எப்படியாவது நாம யாருன்னு காட்டணும்? சினிமாவுல ஜெயிக்கணும்னு நினைச்சேன் என்று தெரிவித்துள்ளார். அந்த இடத்தில் இருந்து தான் சூர்யாவின் உழைப்பு வெளிப்பட்டது. ஜோதிகாவும் இவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
சேதுவில் விக்ரமின் அண்ணனாக சிவக்குமார் நடித்தார். அப்போது இயக்குனர் பாலாவிடம் சூர்யாவை அறிமுகப்படுத்தினார். அது நந்தா வாய்ப்பு கிடைக்கக் காரணமானது. அதுவும் சுமார் ரகம் தான். அதன்பிறகு கனல் கண்ணனிடம் சண்டைப்பயிற்சியும், கலா மாஸ்டரிடம் டான்சும் கற்றுக் கொண்டார்.
தொடர்ந்து ஜோதிகா, இயக்குனர் பாலா, அவரது நண்பர் அமீர், கௌதம் மேனன் ஆகியோர் சூர்யா என்ற ஹீரோவிடம் இருந்து ஒவ்வொரு திறமைகளையும் வெளிக்கொண்டு வந்தார்கள். அமீரின் இயக்கத்தில் மௌனம் பேசியதே படம் சூர்யாவை வேற லெவலில் காட்டியது.
அதன்பிறகு 'காக்க காக்க' படத்தில் தான் ஒரு மாஸ் ஹீரோ என நிரூபித்தார் சூர்யா. இதில் ஜோதிகா தான் அவரது ஜோடி. 'உயிரின் உயிரே' பாடல் அப்போதைய இளம் ரசிகைகளின் மத்தியில் சூர்யாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. நடை, உடை, பாவனையில் படம் முழுவதும் மிரட்டி இருப்பார். அதன்பிறகு மீண்டும் பாலாவுடன் இணைந்து பிதாமகனில் வேறு ஒரு ரகத்தில் தனது நடிப்பைக் காட்டி ரசிகர்களை அசர வைத்திருப்பார்.