பிரச்சனையைக் கையாள சூர்யா கொடுத்த அசத்தல் ஐடியா... நீங்க அதுல எப்படி?
தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர் சூர்யா 2006ல் அகரம் பவுண்டேஷன் அறக்கட்டளையைத் தொடங்கினார். அதற்கான விழாவில் கலந்து கொண்டு நடிகர் சூர்யா பேசியது இதுதான்.
20 வருஷமா அகரம் போய்க்கிட்டு இருக்கு. ஞானவேல்; கேட்ட கேள்வி முதல் தலைமுறை மாணவர்கள் யாருன்னு தெரியுமான்னு கேட்டாங்க. அது தான் அகரம் பவுண்டேஷன் உருவாகக் காரணமாச்சு.
நம்ம லைப்ல நெகடிவிட்டியான விஷயங்கள் நிறைய போகும். ஆனா அதை எல்லாம் நினைக்காம பாசிடிவ்வான விஷயங்கள் மட்டுமே நினைப்போம். நல்லதை மட்டுமே நினைப்போம்.
மத்தவங்களுக்கு வழிகாட்டியா இருப்போம்னு அகரம் பவுண்டேஷன்ல உள்ள குழந்தைங்க வளர்ந்துருக்காங்கன்னா அதுல நானும் இருக்கேன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. நாம எதை நினைக்கிறோமோ அதை நோக்கி நாம முயற்சி செய்தா நிச்சயமா அதை அடைந்தே தீருவோம். நான் படிச்ச படிப்புக்கும், பார்த்த வேலைக்கும் சம்பந்தமே இல்லாம இருந்தது.
சடர்னா ஒரு யுடர்ன் எடுத்தேன். நேருக்கு நேர் நடிச்சதுக்கு அப்புறம் தான் என் மேல மக்கள் இவ்ளோ அன்பு வச்சிருக்காங்களேன்னு நினைக்கும்போது அடுத்து இவங்களுக்காக நாம ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். நீங்க தான் வாழ்க்கையில அடுத்தடுத்த இடத்துக்குப் போகணும்.
பிரச்சனையை பக்கத்துல வச்சிப் பார்த்தா பெரிசா தான் இருக்கும். தூரமா வைங்க. அப்போ அது ரொம்ப சிறுசா தெரியும். பள்ளி மேலாண்மைக்குழு, தன்னார்வ குழுக்களுக்கு நான் நன்றியை சொல்லிக்கிறேன். கிராமங்களில் இருந்து படிச்சவங்க இருந்தா அங்குள்ள படிச்ச பெற்றோர்கள் தயவு செய்து உறுப்பினரா ஆகுங்க.
கல்வி ஒரு கேடயம். அது எல்லாருக்கும் கிடைக்கணும். இது முதல் தலைமுறை மாணவர்களுக்கும் கிடைக்கணும். இது சேலஞ்சிங் கிடையாது. பாசிடிவ். எல்லாரும் ஊர் கூடி தேர் இழுப்போம். நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு படித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.