மாமியார் கொடுமை! தவிக்கும் நடிகை.. இவங்க ஏற்கனவே பிரச்சினை பண்ணவங்களாச்சே

by ராம் சுதன் |
மாமியார் கொடுமை! தவிக்கும் நடிகை.. இவங்க ஏற்கனவே பிரச்சினை பண்ணவங்களாச்சே
X

சில நடிகைகளை பொறுத்த வரைக்கும் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் அவர்களை எப்பொழுதுமே மறக்காமல் ஞாபகம் வைத்திருப்பார்கள். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகை நிலா .இவரது இயற்பெயர் மீரா சோப்ரா. எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நிலா. இருக்கு ஆனா இல்ல என்ற அந்த ஒரு காட்சியை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

அதில் நிலாவை ஒரு பாடு படுத்தி இருப்பார் எஸ் ஜே சூர்யா. அந்தப் படத்திற்குப் பிறகு மருதமலை உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் நிலா. இவர் சினிமாவிற்குள் வந்த காலத்தில் பார்ப்பதற்கு ஒரு சாயலில் சிம்ரன் போன்ற தோற்றத்தில் இருந்ததனால் இவர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது. தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி போன்ற மொழிகளிலும் இவர் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் ரக்ஷித் அகர்வால் என்ற ஒரு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இவரைப் பற்றிய ஒரு செய்தியை தான் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதாவது தன் கணவரின் அம்மா அதாவது நிலாவின் மாமியார் ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நிலாவையே தான் பார்க்க சொல்கிறாராம். வேலையாட்கள் யாரையும் வைக்காமல் அனைத்து வேலைகளையும் இவரைத்தான் பார்க்க சொல்கிறாராம். இதனால் மாமியாரின் கொடுமை அதிகமாகி விட்டதாக நிலா மிகவும் வருத்தப்பட்டாராம்.

இதனால் வீட்டில் பல பிரச்சினைகள் வந்ததாம். ஒரு கட்டத்திற்கு மேல் மாமியார் கொடுமை தாங்க முடியாமல் தன் கணவரை அழைத்துக் கொண்டு இப்பொழுது தனி குடித்தனம் சென்று விட்டதாக பயில்வான் ரங்கநாதன் நிலாவை பற்றி இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார். ஏற்கனவே இவரைப் பற்றிய ஒரு செய்தி தமிழ் சினிமாவில் மிகவும் வைரலானது. அதாவது பிரசாந்தின் அப்பா தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறும்பொழுது பிரசாந்திற்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் .

தென்மாவட்டங்களில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த பொழுது குற்றாலத்தில் இருந்து வரும் தண்ணீர். அந்தத் தண்ணீரில் குளிக்க மாட்டேன். எனக்கு மினரல் வாட்டர் தான் வேணும் அந்த வாட்டரில் தான் நான் குளிப்பேன் என அடம்பிடித்தாராம் நிலா. இது மூலிகை தண்ணீர் ஒன்றும் செய்யாது இயற்கையாக வரும் தண்ணீர் என எவ்வளவோ சொல்லி பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் என்னால் முடியாது என அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார். இந்த அளவுக்கு அந்த படத்தில் மிகவும் பிரச்சனை செய்துவிட்டு தான் சென்றார் என்றும் தியாகராஜன் நிலாவை பற்றி அந்த ஒரு பேட்டியில் கூறி இருந்தார் .இப்போது இவரின் நிலைமை மாமியாரின் கொடுமையால் தலைகீழாக மாறி இருக்கிறது என்பதுதான் உண்மை.

Next Story