கமுக்குமா மாலை மாற்றிக் கொண்ட சாக்‌ஷி அகர்வால்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

by ராம் சுதன் |
கமுக்குமா மாலை மாற்றிக் கொண்ட சாக்‌ஷி அகர்வால்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
X

தமிழ் சினிமாவில் ஒரு வளரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை இவரை பற்றி யாருக்குமே பெரிய அளவில் தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவினை ஒரு தலையாக காதலித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது.

sakshi

sakshi

விசுவாசம் படத்தில் துணை நடிகையாக நடித்திருப்பார். கபாலி படத்திலும் நடித்திருப்பார். இப்படி சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சாக்‌ஷி அகர்வால் லீடு ரோலில் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அது பெருசாக மக்களை ஈர்க்கவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்திலும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாகவும் நடித்தார். ஆனால் எதுவுமே அவருக்கு வொர்க் அவுட் ஆகவில்லை.

sakshi

sakshi

இதற்கிடையில் உடற்பயிற்சி செய்வது, தன் உடம்பை கட்டுக் கோப்பாக வைப்பது என பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை சோசியல் மீடியா மூலம் கொடுத்து வந்தார். ஹெவியான வொர்க் அவுட் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார் சாக்‌ஷி அகர்வால். அவ்வப்போது லைம்லைட்டில் தோன்றும் சாக்‌ஷி அகர்வால் தற்போது தன்னுடைய சிறுவயது முதல் நண்பராக இருந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

sakshi

sakshi

இவர்களுடைய திருமணம் கோவாவில் நடைபெற்றிருக்கிறது. உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமண புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இதற்கு முன் இதே கோவாவில்தான் கீர்த்தியின் திருமணமும் நடைபெற்றது. பெரும்பாலான பிரபலங்கள் தங்களது திருமணத்தை கோவாவில் தான் ஃபிக்ஸ் செய்கிறார்கள். இந்த வரிசையில் சாக்‌ஷிஅகர்வாலும் இணைந்திருக்கிறார்.

Next Story