கலைத்தாயால் என்னை அவ்வளவு சீக்கிரம் கை விட முடியாது.. சொன்னது அஜித்.. எந்த நம்பிக்கையில் தெரியுமா?

by ராம் சுதன் |
கலைத்தாயால் என்னை அவ்வளவு சீக்கிரம் கை விட முடியாது.. சொன்னது அஜித்.. எந்த நம்பிக்கையில் தெரியுமா?
X

விடாமுயற்சியுடன் வரும் விடாமுயற்சி: தற்போது அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. ட்ரெய்லர் மட்டும் அல்ல. டீசர் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட அஜித் நடிப்பில் இரண்டு வருடங்கள் கழித்து இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற ரசிகர்கள் மத்தியிலும் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

மகிழ்திருமேனி சொன்ன விஷயம்: இன்னொரு பக்கம் அவர் ரேசில் பெற்ற வெற்றி, சமீபத்தில் அவருக்கு கிடைத்த பத்மபூஷன் விருது என அடுத்தடுத்து அஜித் மீது பல தரப்பினர் மத்தியிலும் ஒரு பெரும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்து விடாமுயற்சி திரைப்படத்திற்கு ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி படத்தை பற்றி பெரிய அளவில் பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் .அதில் அஜித் பற்றி பல சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

24 மணி நேரமும் சூட்டிங்: அதில் ஒரு சமயம் குட் பேட் அக்லி படமும் விடாமுயற்சி படமும் ஒரே நேரத்தில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கும் நடித்துக் கொடுத்தார். கிட்டத்தட்ட பத்து நாட்கள் இரண்டு படங்களுக்கும் காலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இரவு குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் என 24 மணி நேரமும் தொடர்ந்து நடித்துக் கொடுத்தாராம். இதில் டிராவல் செய்யும் நேரத்தில் மட்டும்தான் தூங்கினாராம் அஜித் .இதில் விடாமுயற்சி படத்தில் சண்டை காட்சிகள் குறைவாக இருந்ததாம் .ஆனால் குட் பேட் அக்லி படத்தில் அந்த நேரத்தில் ஸ்டண்ட் காட்சிகள் தான் அதிகமாக படமாக்கப்பட்டதாம் .

அஜித் சொன்ன விஷயம்: அதுவும் இல்லாமல் அந்த நேரத்தில் அஜித்தின் காலில் ஏதோ காயம் கூட ஏற்பட்டிருந்ததாம். ஆனால் அதை எல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. இப்பொழுது இந்த இரண்டையும் முடித்துவிட்டு ரேசிலும் கலந்து கொள்ள சென்று விட்டார் என மகிழ் திருமேனி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். பல பேர் அவரிடம் சொல்லிப் பார்த்தோம். இப்படி நீங்கள் கஷ்டப்பட வேண்டுமா? இந்த ஒரு எஃபர்ட் எடுத்து இப்படி பண்ண வேண்டுமா என்றெல்லாம் கேட்டு பார்த்தோம் .ஆனால் அதற்கு அஜித் இல்லை இதை கண்டிப்பாக முடித்தே ஆக வேண்டும் .இது என்னுடைய ப்ரொபஷனல் கமிட்மென்ட்.

அதனால் இது நடந்தே தீர வேண்டும் .ஏனெனில் அடுத்து அவர் ரேஸுக்கு ஆயத்தமாகி இருந்ததனால் இந்த மாதிரி அஜித் மிகவும் கடுமையாக உழைத்தார் என மகிழ்த்திருமேனி கூறினார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 24 மணி நேரமும் தொடர்ந்து உழைத்த அஜித் கடைசியாக என்னிடம் சொன்ன வார்த்தை என்னவென்றால் இப்பொழுது கலைத்தாய் என்னை கைவிட மாட்டாள் இல்லையா? ஏனெனில் நான் என்னுடைய வேலையில் சின்சியராக தான் இருக்கிறேன்.

நான் என்னுடைய முதல் படம் பண்ணும் பொழுது என்ன சின்சியாரிட்டியுடன் இருந்தேனோ என்ன ஈடுபாட்டுடன் இருந்தேனோ எவ்வளவு கடுமையான உழைப்பை போட தயாராக இருந்தேனோ எந்த அளவு சுத்தமாக இருந்தேனோ அதேபோல தான் அதே தன்மையுடன் தான் இன்னும் நான் இருக்கிறேன் என்பதை கலைத்தாய்க்கு நிரூபிக்கணும். நிரூபித்து விட்டேன். அப்படி இருக்கும் பொழுது அவள் எப்படி என்னை கைவிடுவாள் என்று அஜித் சொன்னதாக மகிழ்திருமேனி கூறி இருக்கிறார்.

Next Story