அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் பாட்டு உருவான ரகசியம்... அட இளையராஜா அப்படியா சொன்னாரு..?

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 18:50:41  )
ilayaraja
X

இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது. அவர் 80களில் கிட்டத்தட்ட வருடத்திற்கு 50 முதல் 60 வரையிலான படங்களுக்கு இசை அமைத்துக் கொடுப்பாராம்.

ஒரே வாரத்தில் 2 அல்லது 3 படங்கள் வரை இசை அமைத்துக் கொண்டு இருப்பாராம். அந்த மாதிரி நேரங்களில் அவருக்கும் இருக்குற காலகட்டம் ரொம்பவே குறைவு என்பதால் எஸ்.பி.பி., சித்ரா, மனோ, எஸ்.ஜானகி, ஜேசுதாஸ் என தனக்கு மிகவும் பரிச்சயமான பாடகர்களுக்குத் தான் அதிகளவில் சான்ஸ் கொடுப்பாராம்.

பிற புதுப் பாடகர்கள் என்றால் அவர்களுக்கு ஒவ்வொன்றாக சொல்லித்தர வேண்டியிருக்கும். அதற்கான நேரமும் இருக்காது என்பதால் தவிர்த்து விடுவாராம்.

சமீபத்தில் சென்னையில் நடந்த இளையராஜாவின் இசைக்கச்சேரியில் சுவாரசியமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார் இளையராஜா. அது இதுதான்.

இளையராஜாவிடம் இயக்குனர்கள் மணிரத்னம், மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா ஆகியோர் தான் சூழ்நிலையை மட்டும் சொல்லிவிட்டு நீயே எப்படி வேணாலும் பாட்டு போட்டுக்கோன்னு சொல்லிவிடுவார்களாம்.

எனக்கு இப்படித்தான் பாட்டு வேணும்னு கேட்க மாட்டார்களாம். அதில் முதலாமவர் மணிரத்னம். சூழு;நிலையை மட்டும் சொல்லி விட்டு அதுக்குப் பொருத்தமா பாட்டுப் போடுன்ன சொல்லிவிடுவார்.

பாரதிராஜாவிடம் 'இந்த இடம் கண்றாவியா இருக்குய்யா... இதுல ஒரு பாட்டு வையுய்யா'ன்னு சொன்னுன். 'அப்படியா போட்டுவிடு'ன்னு சொல்வாரு. அப்படித்தான் 'அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்' பாட்டு ரெடியானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லணும்னா அதுக்கு நேரம் பத்தாது. சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு பாடலுக்குப் பின்னாடியும் அவ்வளவு விஷயம் இருக்கு என்கிறார் இசைஞானி. தமிழ்த்திரை உலகில் இசைப்புரட்சியை செய்தவர் அவர் தான். ஏன்னா அதிகளவில் சூப்பர்ஹிட்டான பாடல்களைக் கொடுத்தவர் அவராகத் தான் இருக்கும். உதாரணத்திற்கு தோல்விப்படங்களாக இருந்தாலும் அதில் இளையராஜா இருந்தால் பாடல் இனிமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story