உலகளவில் ‘பைசன்’ இத்தனை கோடி வசூலா? துருவ் விக்ரமின் உழைப்பு வீண் போகலயே

Published on: December 5, 2025
---Advertisement---

துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த  மாதம் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் பைசன். இந்தப் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியிருந்தார். படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

மாரி செல்வராஜ் படம் என்றாலே நாங்கள் தாக்கப்பட்டோம், நசுக்கப்பட்டோம் என சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை விளக்கும் படங்களாக எடுப்பார் என்ற ஒரு மனநிலை இங்கு எல்லாருக்கும் இருக்கிறது. அதாவது சாதி ரீதியிலான படங்களைத்தான் எடுப்பார் என்ற விமர்சனமும் இருக்கிறது. அதே பின்னணியில்தான் பைசன் திரைப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட படமாகத்தான் பைசன் அமைந்தது. குறிப்பாக தென் மாவட்டத்தில் மிகவும் பேர் போன விளையாட்டு கபடி. கபடியில் புகழ்பெற்ற மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படமாக பைசன் திரைப்படத்தை எடுத்திருந்தார் மாரி செல்வராஜ். படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தோடு பிரதீப் ரெங்கநாதன் நடித்த ட்யூட் மற்றும் ஹரீஸ் கல்யாண் நடித்த டீசல் போன்ற படங்களும் வெளியாகின.

அதில் டியூட் படமும் அமோக வரவேற்பை பெற்றது. டியூட் மற்றும் பைசன் திரைப்படங்களுக்குத்தான் ரசிகர்கள் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை கொடுத்து வந்தனர். இந்த நிலையில் பைசன் திரைப்படத்தின் உலகளாவிய வசூல் நிலவரத்தை அந்தப் படக்குழு இன்று அறிவித்திருக்கிறது. படம் வெளியாகி 25 நாள்களை கடந்த நிலையில் உலகளவில் பைசன் திரைப்படம் 70 கோடி வசூலித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

bison

இதற்கு முன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா மற்றும் மகான் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்தப் படம் அவருக்கு சரியான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. ஆனால் பைசன் திரைப்படம் இயக்குனரையும் தாண்டி  முழுக்க முழுக்க துருவ் விக்ரமை சுற்றியே அமைந்த திரைப்படம். இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைப்பை போட்டார். அப்பாவை போலவே துருவ் விக்ரமும் படத்திற்காக மும்முரமாக உழைத்தார். அந்த உழைப்பு வீண் போகவில்லை என்பதுதான் உண்மை.

Leave a Comment