Karur: கழுகுக்கு இதுக்கு மட்டும் ஏன் கண்ணு வேர்க்குது!.. ரஜினியை விளாசும் புளூசட்ட மாறன்!..

Published on: December 5, 2025
---Advertisement---

TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். கரூருக்கு இரவு 7 மணி அளவில் விஜய் வந்தார். அங்கு வேலுச்சாமிபுரம் என்கிற இடத்தில் போலீசார் அவருக்கு அனுமதி அளித்திருந்தனர்.

அந்த இடத்திற்கு விஜய் வந்த போது விஜயின் வேன் சாலையின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதால் அங்கு விஜயை காண காத்திருந்த மக்கள் இரு பக்கமும் ஒதுங்கினர். அப்போது சாலை ஓரத்தில் இருந்த சாக்கடையில் பலரும் விழுந்தனர். ஒருவரின் மேல் ஒருவர் என பலரும் விழுந்ததால் 29 பேர் அந்த இடத்திலேயே மூச்சு திணறி அங்கேயே உயிரிழந்தனர்.

விஜய் அங்கிருந்து சென்ற பின் அவர்கள் மீட்கப்பட்டு கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜயை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக அவரை பிடிக்காதவர்களும் திமுகவினரும் அவரை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள், இந்த சம்பவத்திற்கு விஜய்தான் காரணம் என அவரை திட்டி வருகிறார்கள். இதில், ரஜினி ரசிகர்களும் அடக்கம்.

ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா கழுகு சொன்ன போது அவர் காக்கா என குறிப்பிட்டது விஜயைத்தான் என அப்போது விஜய் ரசிகர்கள் கோபப்பட்டனர். அதன்பின் ஒவ்வொரு முறையும் ரஜினி படம் வெளியாகும் போதும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்படத்திற்கு எதிராக ட்ரோல் செய்து வருகிறார்கள். நேற்று இரவு கரூரில் இறப்பு செய்தி வெளியாகி இரண்டு மணி நேரத்தில் நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்காக இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல youtube விமர்சகர் புளூ சட்டமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மிகவும் வேதனையாக இருக்கிறது என கழுகு ஆதங்கம் காட்டியிருக்கிறார். கும்பமேளா சம்பவம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம், விமான சாகச நிகழ்ச்சிகள், கவின் ஆணவ படுகொலை இதுக்கெல்லாம் வாயவே திறக்கவில்லை. இது சம்பந்தமாக நிருபர்கள் கேள்வி கேட்ட போதும் ‘நோ கமெண்ட்ஸ்’ என சொல்லிவிட்டார். ‘அரசியல் பேச மாட்டேன்’ என எத்தனை தடவை சொல்வது என கோபமாக பதில் சொல்லுவார். ஆனால் இன்றைக்கு மட்டும் கழுகுக்கு திடீர்னு கண்ணு வேர்த்துடுச்சி’ என பதிவிட்டிருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment