நட்ட நடு ராத்திரில பாக்கியராஜின் கையைப் பிடித்து கதறி அழுத கவுண்டமணி... என்னவா இருக்கும்?
கவுண்டமணியின் நிஜப்பெயர் சுப்பிரமணி. உடுமலைப்பேட்டை பக்கத்துல உள்ள வல்லகொண்டபுரம் தான் சொந்த ஊரு. சின்ன வயசுல இவருக்குப் பேச்சே சரியாக வராதாம். இதனால இவங்க அக்கா ஏறி இறங்காத கோயிலே இல்லையாம்.
அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா பேச்சு வர நாடகத்துல நடிக்க ஆரம்பிச்சிருக்காரு. அங்க இவரு டயலாக்கோடு சேர்த்து கவுண்டரு கொடுக்க எல்லாரும் ரசிச்சிப் பார்த்தாங்களாம். அப்புறம் அவருடைய பேரே கவுண்டமணி ஆயிடுச்சாம்.
இவர் ஆரம்பத்துல சினிமாவுல பாரதிராஜாவோட 16 வயதினிலே படத்துல இருந்து தான் வெளியே தெரிய ஆரம்பிச்சாரு. அப்போ ரஜினிக்கு கையாளா வரும் கவுண்டமணி 'பத்த வச்சிட்டியே பரட்டை'ன்னு சொல்ற டயலாக் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்ததாம்.
அதே போல பாக்கியராஜ் தான் இவரை கிழக்கே போகும் ரயில் படத்துல வில்லனா நடிக்க சிபாரிசு பண்ணினாராம். அப்போ கவுண்டமணியை வில்லனா போடணும்னா நீ அவனை வச்சி ஒரு ஷாட் எடுத்துக் காட்டுன்னு பாரதிராஜா சொல்ல பாக்கியராஜூம் அதே மாதிரி ஒரு ஷாட் எடுத்து பாரதிராஜாவிடம் போட்டுக் காட்டியுள்ளார்.
அப்போ சென்னை போர்பிரேம் தியேட்டர்ல அந்தக் காட்சியைத் திரையிட்டாங்க. திரையில கவுண்டமணி வர்ற காட்சிக்கு எல்லாம் பாக்கியராஜூம், மனோபாலாவும் சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க. அதைப் பார்த்த பாரதிராஜா 'நீ சிபாரிசு பண்ணின ஆள் நடிக்கிறாங்கறதுக்காக சிரிக்கிறியா? எனக்கு சிரிப்பே வரலடா'ன்னு பாரதிராஜா சொல்லிருக்காரு.
அதைக் கேட்ட பாக்கியராஜ் எங்கே கவுண்டமணிக்கு வாய்ப்பு கிடைக்காதோன்னு முடிவு பண்ணிருக்காரு. ஆனா அந்தக் காட்சி முடிஞ்சதும் எழுந்த பாரதிராஜா இந்த ரோல்ல இவன் தான் நடிக்கணும்னு சொல்லிட்டுப் போயிடறாரு.
இது நடக்கும்போது நள்ளிரவு 12 மணியாம். ஆனா பாக்கியராஜ் என்ன சொல்லிருப்பாரோ, பாரதிராஜா என்ன சொல்லிருப்பாரோன்னு ரிசல்ட் தெரியாததால தேனாம்பேட்டை சிக்னல் பக்கத்துல பாக்கியராஜிக்காக கவுண்டமணி காத்திருந்தாராம்.
நுங்கம்பாக்கத்துல இருந்து தேனாம்பேட்டைக்கு சைக்கிள்ல பாக்கியராஜ் போறாரு. அவரு கவுண்டமணியைப் பார்த்ததும் பாக்கியராஜ் ஓகேன்னு சொல்லிட்டாருன்னு சொல்ல கவுண்டமணி அவரு கையைப் பிடிச்சு ஆனந்தத்துல கதறி அழுதாராம். அப்போ அவர் தயாரா வச்சிருந்த தேங்களாய், கற்பூரத்தை எடுத்து பக்கத்துல உள்ள அம்மன் கோவில்ல கற்பூரத்தைக் கொளுத்தி, தேங்காயை விடலைப் போட்டாராம்.