தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பை தாண்டி டைரக்சன், பாடலாசியர் , பாடகர் என பல அவதாரங்கள் எடுப்பவர் இவர்.அதே வேலை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ்.
சமீபத்தில் இவர் நடித்த தெலுங்கில் குபேரா தமிழில் இட்லி கடை ஆகிய படங்கள் வெளியாகின. ஆனால் இந்த இரு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தியில் தேரே இஷ்க் மே (Tere Ishk Mein) படம் வெளியாகியுள்ளது. கீர்த்தி சனோம் நாயகியக நடிக்கும் இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ளார். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
தனுஷ் தேரே இஷ்க் மே படத்திற்காக எவ்வளவு சமபளம் வங்கினார் என்ற தகவல் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது குபேரா படத்திற்காக ரூ 30 கோடி வரையும், இட்லி கடை படத்திற்காக ரூ 40 கோடி வரை பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தனுஷ் தேரே இஷ்க் மே படத்திற்காக ரூ. 15 மட்டுமே ஊதியமக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com
