முதல்வராகட்டுமே! உங்களுக்கு என்ன பிரச்சனை? விஜய்க்கு ஆதரவாக இறங்கிய இயக்குனர்

சினிமாவைப் பொறுத்த வரைக்கும் எம்.ஜி.ஆர், ரஜினி இவர்களுக்கு அடுத்தபடியாக பெரிய ஆளுமையுடன் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். ஒரு வசூல் சக்கரவர்த்தியாக இன்று வரை முதல் இடத்தில் இருக்கிறார் விஜய். இவருடைய படங்களுக்கு ஓப்பனிங் சிறப்பான முறையில் இருந்து வருகிறது .
கிட்டத்தட்ட 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார் l. இப்படி இருக்கும் போதே சினிமாவை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என அரசியலில் இறங்கி இருக்கிறார். இதுவே ஒரு பெரிய விஷயம்.
தற்போது விஜய் எச் வினோத் இயக்கத்தில் அவருடைய கடைசி படமான 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு முழுவதுமாக சினிமாவிற்கு குட் பை சொல்லிவிட்டு தீவிரமாக அரசியலில் இறங்க போகிறார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை தைரியத்துடன் எதிர் கொள்ள இருக்கிறார் விஜய்.
இதுவரை இரண்டு கூட்டங்களில் பேசியிருக்கும் விஜயால் ஒட்டுமொத்த அரசியல் களமும் பீதியில் இருக்கின்றது .அவருடைய மாநாட்டில் எக்கச்சக்க கருத்துக்களை பகிர்ந்து இருந்தார் விஜய். அதுபோக சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு அனைவரையும் திகைக்க வைத்தது.
ஆளும் கட்சியை எதிர்த்து மிக தைரியமாக குரல் கொடுத்திருந்தார் விஜய். இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரான ஆர் வி உதயகுமார் விஜயின் அரசியல் பற்றி அவருடைய கருத்துக்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதாவது எம்ஜிஆர் அரசியலுக்கு வரும்போதும் பல விமர்சனங்கள் எழுந்தன. அதைப்போல தான் விஜய்க்கும் இருந்து கொண்டு வருகின்றன .
எம்ஜிஆர் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்து முதல்வரானவர். அண்ணா பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவரும் முதல்வரானவர். கலைஞர் கருணாநிதியும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அவரும் அரசியலுக்கு வந்து முதல்வரானார் .
ஜெயலலிதா அம்மையாரும் முன்னணி நடிகையாக இருந்து அதன் பின் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக மாறியவர். இப்படி தமிழகத்தில் இருந்த முதல்வர்கள் அனைவருமே சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். அப்படி இருக்கும்போது இவரும் முதல்வராகட்டுமே. ஏதாவது மாற்றத்தை கொண்டு வரலாம் இல்லையா. அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவர் இன்னும் அரசியலையே ஆரம்பிக்கவில்லை.
அதற்குள் 1008 பிரச்சனை. இரண்டு கூட்டங்களில் மட்டும்தான் பேசியிருக்கிறார் விஜய் என ஆர் வி உதயகுமார் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.