சும்மா ஆசையில நடிக்க வந்தியா?!. சினிமாவ சீரியஸா எடுத்துப்பியா?!.. அஜித்திடம் கேள்விகேட்ட இயக்குனர்...

by ராம் சுதன் |

அஜித் துவக்கத்தில் சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். அப்போது அவருக்கு நண்பர்கள் பலரும் உதவி செய்தார்கள். பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டார் அஜித். அமராவதி என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போல அழகாக இருந்ததால் அவரை எல்லோருக்கும் பிடித்தது. தொடந்து சில படங்களில் நடித்தார். ஆசை படம் அவருக்கு பல பெண் ரசிகைகளையும் பெ|ற்று கொடுத்தது. காதல் கோட்டை படத்தின் வெற்றி அஜித்தை முன்னணி நடிகராக மாற்றியது. சில ஹிட் படங்கள், பல தோல்விப்படங்கள் என வலம் வந்தார். காதல் மன்னன், அமர்க்களம் என டேக் ஆப் ஆனார்.

பில்லா படம் மூலம் மாஸ் நடிகராக மாறினார். மங்காத்தா திரைப்படம் அவருக்கு பல ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. துவக்கம் முதலே விஜய்க்கு போட்டியாகவே வலம் வந்தார். இருவருமே காதல் படங்களில் நடித்து ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பின்னர் மாஸ் நடிகராக மாறியவர்கள்தான்.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், அஜித்தை ஆசை படத்தில் நடிக்க வைத்த இயக்குனர் வசந்த் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசி இருந்தார்.

அப்போது ‘அவரை ஒரு விளம்பர படத்தில் பார்த்தேன். அப்போது மிகவும் ஒல்லியாக இருந்தார். வேண்டாம் எனவும் தோன்றியது. விட்டுவிடவும் மனசு இல்லை. எனவே, அவரை இண்டர்வியூ செய்தேன். நடிப்பு எவ்வளவு பிடிக்கும்? சும்மா ஒரு படம் நடிப்போம் என்கிற ஆசையில் வந்தீர்களா? இல்லை சினிமாவை சீரியஸாக எடுத்து கொள்வீர்களா? என பல கேள்விகளை கேட்டேன்.

இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் குணம் அவருக்கு உண்டு. எனவே, இந்த உயரம் போவார் என அப்போதே நினைத்தேன்’ என் அவர் சொல்லி இருந்தார்.

Next Story