யார் இந்த சாய் அபியங்கர்? பெற்றோர் யார் தெரியுமா? ஓவர் நைட்டில் புகழ்பெற்ற பின்னணி இதோ

by ராம் சுதன் |
யார் இந்த சாய் அபியங்கர்? பெற்றோர் யார் தெரியுமா? ஓவர் நைட்டில் புகழ்பெற்ற பின்னணி இதோ
X

கட்சி சேரா, ஆச கூட பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாட வைக்கும் பாடலாக மாறியிருக்கிறது. பட்டி தொட்டியெல்லாம் இந்த பாடல்கள் பிரபலமானது. அந்த பாடலுக்கு இசையமைத்தவர்தான் சாய் அபியங்கர். அதுவரை இவர் யாரென்றே யாருக்கும் தெரியாது. இந்த ஆல்பம் சாங் பெரிய அளவில் ஹிட்டான பிறகு இவரை பற்றி தேட ஆரம்பித்தார்கள்.

2000களில் மிகவும் பிரபலமான பாடகர்களாக இருந்தவர்கள்தான் திப்பு மற்றும் ஹரிணி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய மகன் தான் இந்த சாய் அபியங்கர். 6 வயதிலிருந்தே இவருக்கு இசை மீது அதிக காதல், அதனால் 13 வயதில் ஏஆர் ரஹ்மானிடம் ஒப்படைத்துவிட்டனர் இவர்களுடைய பெற்றோர். முதன் முதலில் கோப்ரா படத்தில் இசை நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறார்.

அது போக பொன்னியின் செல்வன், பத்து தல போன்ற படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவர் தன் கூடவே ஒரு நண்பரை வைத்திருக்கிறார். அவர்தான் கட்சி சேரா மற்றும் ஆச கூட பாடலை எழுதியவர். இப்படி தன் நண்பரை வைத்தே ஆறு பாடல்களை கம்போஸ் செய்திருக்கிறார் சாய் அபியங்கர். இவருடைய இந்த ஆல்பம் பாடல் இரண்டும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற பிரபலங்களும் இவரை அழைத்து பாராட்டியிருக்கிறார்கள்.

அந்த பாடல்தான் இவரை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. ஆனால் இவர் திப்பு ஹரிணி இவர்களின் மகன் என பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. இப்போதுதான் இவரை பற்றி அனைவரும் அறிய ஆரம்பித்திருக்கின்றனர். சாய் அபியங்கருக்கு இப்போது வயது 19. இன்று டாக் ஆஃப் தி டவுனாக இருப்பதும் சாய் அபியங்கர்தான். அதற்கு காரணம் சூர்யா 45 திரைப்படம்.

இந்தப் படத்தில் முதலில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாக இருந்து பின் அவருக்கு பதிலாக சாய் அபியங்கர் இசையமைப்பாளராக இணைந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். அனிருத் மாதிரி அடுத்ததாக இள வயதிலேயே பிரபலமான இசையமைப்பாளராக களமிறங்குகிறார் சாய் அபியங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story