இந்தியன் 3 நானா எடுக்க சொன்னேன்… மேடையில் வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்…

by ராம் சுதன் |

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. ஜூலை 12 இந்தியன்2 வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படக்குழு புரோமோஷன் பணிகளில் மும்முரமாக இறங்கிவிட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த் மூவரும் கலந்துக்கொண்டு பேசி இருக்கின்றனர். இதில் கமல் பேசும்போது, 6 வருடமாக ஷங்கருடன் பணிபுரிந்து வருகிறேன். அவர் என்னிடம் எதுவும் சொன்னதே இல்லை. ஆனால் நான் இந்தியன்3 படத்துக்காக தான் இந்தியன்2 செய்வதாக பேசிய பின்னர் எனக்கு கால் செய்தார்.

என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க. ஒரே ஒரு பிரஸ்மீட்டில் இப்படி ஆச்சு எனக் கேட்டார். ஒரு குழந்தையிடம் போய் அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? கேட்டா என்ன பதில் சொல்லும். அதுக்கு ரெண்டு பேருமே ஒன்னும் தானே. அதுப்போல தான். எனக்கு இந்தியன்3 பிடிக்கும் எனக் கூறுவதால் இந்தியன்2 பிடிக்காது என்பது அர்த்தம் அல்ல.

நானா இந்தியன்3 படத்தினை எடுக்க சொன்னேன். ஜூலை12 இந்தியன்2 ரிலீஸ் முடிவாகிவிட்டது. அதனால் இந்தியன்3 படத்தின் ரிலீஸை நோக்கி எதிர்பார்த்து இருக்கிறேன். அத யாரும் தடுக்க முடியாது. இந்தியன்3 மேல ஆசை வந்துட்டு அதுக்கு என்ன செய்ய முடியும்?

எனக்கு பிடித்த சம்பவங்கள் அதில் தான் நிறைய இருக்கிறது. சாம்பார் மற்றும் சோறு பிடித்தாலும் எனக்கு பாயசம் பிடிப்பதில் தப்பு இல்லையே. தமிழ் சினிமாவில் இந்தியன் உருவான போது அது பிரம்மாண்ட படைப்பாக இருந்தது. தற்போது இந்தியன்2 மற்றும் இந்தியன்3 படத்தினை ஒப்பிடும் போது நடுத்திர படமாகிவிட்டது இந்தியன்.

ஷங்கர் என்னிடம் இந்தியன்2 கதையை சொல்ல வந்த போது இனிமேல் இந்த சேனாதிபதி வைத்து என்ன செய்ய முடியும் என நினைத்தேன். ஆனால் ஷங்கர் சொன்ன கதையில் நான் பிரமித்துவிட்டேன். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது. சென்சார் போர்டினர் எப்போதுமே பெரிதாக பேச மாட்டார்கள். அவர்களே இந்தியன்2 படத்தினை பாராட்டி உள்ளனர் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story