இவங்ககிட்ட கவனமா இருங்க! நயன்தாராவை பற்றி அன்றே கணித்த தனுஷ்

Published on: March 18, 2025
---Advertisement---

நயன்தாரா – தனுஷ்:

சில தினங்களுக்கு முன்பு தனுஷுக்கு எதிராக ஒரு அறிக்கை விட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் நயன்தாரா. அவருடைய திருமண டாக்குமெண்டிரியில் நானும் ரவுடிதான் பட பாடல் மற்றும் காட்சிகளை பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் என்.ஓ.சி கொடுக்கவில்லை என்பதால் அவரை பற்றி கடுமையாக விமர்சித்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் நயன்.

ஆனால் இது எதற்குமே செவி சாய்க்காமல் எல்லாவற்றையும் நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என தனுஷ் அமைதியாக இருந்தார். அதில் வெற்றியும் கண்டார். தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சேர்ந்து யாரடி நீ மோகினி படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்தப் படத்தில் இருந்தே இருவருக்குமான நட்பு ஆரம்பித்தது. நல்ல நண்பர்களாக இருவரும் பழகி வந்தார்கள்.

பேசப்பட்ட ஜோடி:

அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை. ஆனால் யாரடி நீ மோகினி படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இருவரும் ஒரு பழைய பேட்டியில் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்தது இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. அதில் நயன்தாராவை பற்றி சொல்லவேண்டுமென்றால் என்ன சொல்வீர்கள் என்ற கேள்வி தனுஷிடம் கேட்கப்பட்டது.

அதற்கு தனுஷ் ‘ நயன்தாரா என்றால் சோம்பேறி. ரொம்ப ஷார்ட் டெம்பர். அதனால் கவனமாக இருங்க.. கடின உழைப்பாளி. நிறைய செலவு செய்வார்கள் மற்றவர்களுக்காக. ஒருவரை பிடித்துவிட்டது என்றால் அவங்களுக்காக எந்த எல்லைக்கும் போவார் நயன்தாரா ’ என கூறினார் தனுஷ். இதில் அவர் மிகவும் ஷார்ட் டெம்பர் என்று அன்றே சொல்லியிருக்கிறார் தனுஷ் என சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.

அதுவும் இப்போது அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பிரச்சினையுடன் இந்த பழைய வீடியோவை தொடர்புபடுத்தி ச்ச.. தனுஷுக்கு நயன்தாராவை பற்றி அன்றே தெரிஞ்சிருக்குப்பா என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜயகாந்தின் அந்தப் படத்தில் வடிவேலு வந்தது இப்படித்தான்! இவ்ளோ போராட்டம் நடந்துச்சா

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment