அட்டகாசம் திரைப்படம்;
சமீபகாலமாக ஏற்கனவே ஹிட்டான படங்களை ரீ ரிலீஸ் செய்து திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பார்த்து வருகின்றனர். இப்போது வருகிற திரைப்படங்கள் மக்களை பெரிதாக ஈர்க்கவில்லை. குறிப்பாக பெரிய பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் அந்த அளவு மக்களின் வரவேற்பை பெறவில்லை. ரீ ரிலீஸ் என்ற பெயரில் ஏற்கனவே ஹிட்டான திரைப்படங்களை மறுபடியும் ரிலீஸ் செய்து அதன் மூலம் திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பார்த்து வருகின்றனர்.
இதில் ஒரு சில படங்கள் ரீரிலீஸில் ஜெயித்திருக்கின்றன. ஒரு சில படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றன. குறிப்பாக விஜய் நடித்த கில்லி திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத ஒரு மாபெரும் வெற்றியை ரீ ரிலீஸில் செய்திருந்தது. கோடிக்கணக்கில் வசூலை அள்ளியது. அதேபோல ரஜினி திரைப்படம் சூர்யா அஜித் போன்றவர்களின் திரைப்படங்களும் ரீரிலிஸ் ஆகி வருகின்றனர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்:
இந்த நிலையில் நேற்று அஜித் நடித்த அட்டகாசம் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீஸ் செய்த திரையரங்குகளில் அட்டகாசம் திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். திரையரங்கிற்குள் பட்டாசு எல்லாம் வெடித்து தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள் ரசிகர்கள். இன்னொரு பக்கம் ஏற்கனவே மோசமான விமர்சனத்தை பெற்ற அஞ்சான் திரைப்படத்தை புதிய வடிவமைப்பில் மாற்றி ரீ ரிலீஸ் செய்தார் லிங்குசாமி.
ஆனால் சில பல காரணங்களால் காலை நேர ஒளிபரப்பு மட்டும் ரத்து செய்யப்பட்டது. மதியத்திற்கு மேல் அந்த படம் ஒளிபரப்பானது. அதுமட்டுமல்ல நேற்றும் ஒரு சில படங்கள் புதியதாக ரிலீஸ் ஆகின. ஆனால் அஞ்சான் அட்டகாசம் திரைப்படம் அளவுக்கு நேற்று ரிலீசான திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, டிடிஎஃப் வாசன் நடிப்பில் ஐபிஎல் போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ரீ ரிலீஸில் வசூல்:
அஞ்சான் திரைப்படமும் அட்டகாசம் திரைப்டம்தான் முதல் இடத்தில் இருக்கின்றன. இதில் அட்டகாசம் திரைப்படம் தமிழக அளவில் மட்டும் 23 லட்சம் வசூல் செய்திருப்பதாக திருச்சி ஸ்ரீதர் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் அஞ்சான் திரைப்படம் தமிழக அளவில் 8 லட்சம் வசூல் செய்திருப்பதாக கூறி இருக்கிறார். சனி ஞாயிறு விடுமுறை என்பதால் இன்னும் வசூலை எதிர்பார்க்கலாம் என்றிருந்த நிலையில் அடுத்தடுத்து கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பதால் அந்த வசூலும் குறையவே வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.