இந்தியன் 2 படத்தில இதை எல்லாம் கவனிச்சீங்களா? அட இவ்ளோ விஷயம் பண்ணியிருக்காங்களா?

by ராம் சுதன் |

இந்தியன் 2 படத்தில் கமல் 7 கெட்டப்பில் வருகிறார். அடுத்த பாகத்தில் 5 கெட்டப்பில் வருகிறார். படத்திலமேக்கப் இந்தியன் முதல் பாகம் போல இல்லை. அனிருத் மியூசிக் எடுபடவில்லை என்று சொன்னாலும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் தான் மேலோங்கி வருகிறது.

இதற்குக் காரணம் 96ல் வந்த முதல் பாகம் தான். அப்போது ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் தெறிக்க விட்டன. சரி. இப்போது வெளியாகி உள்ள இந்தியன் 2 படத்தில் நாம் கவனிக்க மறந்த 10 பாசிடிவ்வான விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாமா...

இந்தப் படத்தில் முதல் பாசிடிவ்வான விஷயம் கமல், ஷங்கர் காம்போ தான். இந்தக் காம்போ நம்மை பெரிதாக ஏமாற்றாது என்றே சொல்லலாம். அடுத்ததாக பாசிடிவ்வான விஷயம் வசனம்.

ஜெயமோகன், லட்சுமி சரவண குமார், கபிலன் வைரமுத்து இவர்களுடன் இணைந்து ஷங்கரும் வசனம் எழுதினார். சுஜாதா அளவுக்கு இல்லை என்றாலும் வசனம் மொக்கையாகி விடுமோ என்று பார்த்தால் அது நடக்கவில்லை.

கமலின் என்ட்ரி சீன், ஏர்போர்ட் சீன் செம ட்ரீட். அதுல மேக்கப், பர்பாமன்ஸ் எல்லாமே பக்காவாக இருந்தது. தமிழகத்தில் நடக்கும் இலவசங்கள், குப்பை வண்டி என பல பொதுப் பிரச்சனைகளை ஷங்கர் தைரியமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சமுத்திரக்கனி, சித்தார்த் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பிளஸ். மறைந்த கலைஞர்களான விவேக், நெடுமுடிவேணு, மாரிமுத்து, மனோபாலா என பலரது நடிப்பும் அட்டகாசம். அவர்களது குரலும் ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்கள்.

படத்தில் ஷங்கருக்கே உரிய கலர்புல்லான சாங், அதுவும் முதல் பாடலான காலண்டர் சாங்கை அல்டிமேட் விஷ_வலாகக் கொடுத்துள்ளார். விவேக்குடன் அடிக்கும் டயலாக் படத்தின் பிளஸ். இந்தப் படத்தின் முடிவில் இந்தியன் 3 டிரைலர் பார்க்கும்போது கூஸ்பம்ப்ஸா இருக்கிறது.

இந்தியன் 3 படம் இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் தான் என்பதை மறுக்க முடியாது.

Next Story