More

நேர்கொண்ட பார்வை தெலுங்கு போஸ்டரை வெளியிட்ட போனிகபூர்…வச்சு செய்யும் தல ரசிகர்கள்….

மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் உருவான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை வினோத் இயக்க, நடிகர் அஜித் நடித்திருந்தார். தல அஜித் வழக்கறிஞராக நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இப்படத்திற்கு பின் அதே போனிகபூர் இயக்கத்தில் வினோத் இயக்க வலிமை படத்தில் அஜித் நடித்து வந்தார். அப்படம் பற்றி அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் எவ்வளவு கெஞ்சியும் போனி கபூர் தல ரசிகர்கள் மீது இரக்கமே காட்டவில்லை. எனவே, அவர் மீது அவர்கள் கடுப்பில் உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஜித் ஏற்ற கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு வக்கீல் சாப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Advertising
Advertising

இதைக்கண்டு கடுப்பான தல ரசிகர்கள் இதற்கெல்லாம் உங்களுக்கு நேரமிருக்கு.. வலிமை பற்றி அப்டேட் கேட்டால் மட்டும் மௌனம் சாதிக்கிறீர்கள். வலிமை அப்டேட் கொடுப்பியா? மாட்டியா? என கோபத்துடன் டிவிட் செய்து வருகின்றனர்.

 

Published by
adminram

Recent Posts