சிவகார்த்திகேயன் தல தப்பிச்சது... ஆனா பாவம் சிம்புதான் மாட்டிக்கிட்டாரு... இருந்தாலும் பண்ணிருக்கலாம்...?

by ramya suresh |

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி இருக்கின்றார். மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக ரீஎன்றி கொடுத்திருக்கும் சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட நல்ல படங்களை கொடுத்திருந்தார். தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார்.

இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடிக்கின்றார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே எஸ்டிஆர் 48 திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் ஃபேக்டரி தான் இயக்கப் போகிறது என்ற தகவல் வெளியானது. ஆனால் சாட்டிலைட் டிஜிட்டல் உரிமம் மொத்தமாக சரிந்ததால் இந்த படத்தை எப்படி எடுப்பது என்று கமலஹாசன் தயங்கி வந்திருக்கின்றார்.

அப்போது அதை புரிந்து கொண்ட சிம்பு இந்த படத்தை நானே தயாரித்துக் கொள்கிறேன் என்ற முடிவை அவரே எடுத்ததாக கூறுகிறார்கள். இதை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் திரைப்படத்தை எடுக்க முடிந்த கமலஹாசனுக்கு, சிம்புவை வைத்து இந்த படத்தை எடுக்க முடியவில்லையா? என்று கூறி வந்தார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக வலைப்பேச்சு அந்தணன் தனது பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: "ஒரு வேலை அமரன் திரைப்படம் தொடங்கிய சமயத்தில் இதுபோன்று சேட்டிலைட் டிஜிட்டல் உரிமம் பிரச்சினை வந்திருந்தால் கண்டிப்பாக கமலஹாசன் அந்த திரைப்படத்தையும் தான் ட்ராப் செய்திருப்பார். அந்த படம் தொடங்கி படப்பிடிப்பு முடிந்து அதற்கான உரிமம் அனைத்தும் விற்கப்பட்டது. ஆனால் எஸ்டிஆர் 48 படம் தொடங்கப்படும் போது தான் இப்படி ஒரு அறிவிப்பு வெளியானது.

அதனால்தான் கமலஹாசன் இந்த திரைப்படத்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார். ஒருவேளை எஸ்டிஆர் திரைப்படமும் பாதிக்கு மேல் எடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக இப்படத்தை கமலஹாசன் தான் தயாரித்து இருந்திருப்பார். மற்றபடி கமலஹாசனுக்கும் சிம்புவுக்கும் இடையே ஒரு சிறந்த அன்பு உருவாகி இருக்கின்றது. இருவரும் அவ்வளவு நட்புடன் பழகி வருகிறார்கள்" என்று அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

Next Story