இந்தியன் 2 பட வில்லன் என்ன செய்வார்னு தெரியுமா? கமல் போட்டு உடைத்த ரகசியம்

by ராம் சுதன் |

ஷங்கரின் இயக்கத்தில் நாளை மறுநாள் (12.07.2024) உலகெங்கும் இந்தியன் 2 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்தது. கடைசியாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் இந்தப் படத்தின் வில்லன் என்ன செய்யப் போகிறார் என்று பூடகமாகத் தெரிவித்துள்ளார். பார்க்கலாமா...

இந்தியன் 2 ஒரு கலைப்படைப்பு. 'ரௌத்திரம் பழகு'ன்னு பாரதியார் சொல்லிட்டதால எல்லாருக்கிட்டயும் காட்ட வேண்டிய அவசியமல்ல. நேதாஜியின் வீரத்தை ஒட்டுமொத்தமாக பரப்ப வேண்டிய அவசியம் கிடையாது. காந்தியின் பொறுமையை ஒட்டுமொத்தமாக இழக்க வேண்டிய அவசியமும் கிடையாது. நேதாஜியின் வீரம் என்பது வெட்டு குத்து மட்டும் இல்ல. அந்தப் பயணம், அந்தப் பட்டினி, அந்த ஒன்று திரட்டல், அந்தத் திறமையைப் பாருங்க.

காந்தி மட்டும் தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாருன்னு சொல்ல முடியாது. இது பல்முனைத் தாக்குதல். அதைத் தாங்கமுடியாம வெள்ளைக்காரன் ஓடிப்போனாங்கறது தான் உண்மை. ஒரு பக்கம் வன்முறை தாக்குதலும் இருந்தது. இன்னொரு பக்கம் அகிம்சை தாக்குதலும் இருந்தது. சட்டப்பூர்வமான தாக்குதலும் இருந்தது. அத்தனைக்கும் மேலாக மக்கள் குரல் மேலே எழுந்தது.

எனக்கு இந்தப் படத்தைப் பற்றி இவர் சொல்லும்போது எல்லாரும் இதைப் 'பேன் இண்டியன்' பிலிம்ங்கறாங்க. பேன் இண்டியன் தாக்ட், பேன் இண்டியன் குற்ற உணர்வு, பேன் இண்டியன் கடமை உணர்வு, பேன் இண்டியன் வீரம். தேவையான நேரத்துல இதை எல்லாம் ஒன்றாய் குவிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

இந்தப் படம் இதை மட்டும் தான் சொல்கிறது என நினைக்கக்கூடாது. புரூஸ்லீ படம் பார்க்குறோம்னா வெளிய வந்ததும் மாமன் மச்சானை மிதிங்கறது இல்ல. இது கலைப்படைப்பு. இது உங்களுக்குள் இருக்கும் வில்லனைச் சுட்டிக் காட்டுவது தான். எல்லாருக்குள்ளும் ஒரு வில்லன் இருக்குறான். தவறுகளே செய்யும் போது ஒரு குரலுக்கு நீங்கள் செவிசாய்க்க மறந்ததால் தான் தவறே நிகழ்கிறது.

தடுக்கி விழறதுல இருந்து தற்கொலை செய்றது வரைக்கும் உங்க மனசு சொல்லிக்கிட்டே இருக்கும். வேண்டாம். இதை செய்யாதேன்னு. நல்லது செய்யும்போதும், பல சிக்கல்கள் எழும்போதும் இல்ல செய்னு சொல்லும். அப்படி சொன்னதனால தான் ஷங்கர் பார்ட் 2, பார்ட் 3 எடுக்கிறாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story