Kantara: Chapter 1: 1000 கோடி கன்பார்ம்!.. காந்தாரா சேப்டர் ஒன் டிரெய்லர் வீடியோ பாருங்க..

Published on: December 5, 2025
---Advertisement---

தெலுங்கு, கன்னட படங்கள் தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஹிட் அடிக்க துவங்கிய போது கன்னடத்தில் இருந்து வெளியான திரைப்படம்தான் காந்தாரா. ரிசப் ஷெட்டி நடித்து இயக்கியிருந்த இந்த திரைப்படம் 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் அடித்தது.

காட்டுக்குள் வசிக்கும் மக்களின் ஆதி கால தெய்வம் பற்றி இந்த படம் பேசியது. இந்த படத்தில் கடவுளை அவர்கள் காட்டியிருந்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது. அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு உதவியது. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் ‘‘Kantara Chapter 1’ கதையை இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தை காந்தாரா, கேஜிஎப் 2 ஆகிய படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

Kantara: Chapter 1: 1000 கோடி கன்பார்ம்!.. காந்தாரா சேப்டர் ஒன் டிரெய்லர் வீடியோ பாருங்க..
#image_title

வருகிற அக்டோபர் 2ம் தேதி இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தையும் ரிசப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கிறார். மிகவும் அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது சுமார் 5 பேர் வரை இறந்து போனார்கள்.

இது அபஷ குணமாக பார்க்கப்பட்டாலும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் படக்குழு கடுமையாக உழைத்து படப்பிடிப்பை முடித்தனர். தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படத்தில் மதராஸி படத்தில் நடித்தும் ருக்மணி வஸந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், ஜெயராம்,கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கிறார். அதில், அசத்தலான போர் காட்சிகள், கடவுள் தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இந்த டிரெய்லர் வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படம் கண்டிப்பாக 1000 கோடி வசூலைம் பெறும் என சொல்ல துவங்கிவிட்டனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment