Karuppu Movie;

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் கருப்பு. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு ஆன்மீகத்தையும் இணைக்கும் ஒரு வித்தியாசமான கதைகளாக இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சூர்யா த்ரிஷா இவர்களுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி நட்ராஜ் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஜனவரி மாதம் இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி உரிமம் பற்றிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிக விலைக்கு வாங்கிய நிறுவனம்:

இந்த படத்தின் உரிமையை zee நிறுவனம் வாங்கியிருக்கிறதாம். அது மட்டுமல்ல சூர்யாவின் கரியரிலேயே இந்த படம் தான் அதிக அளவில் விற்கப்ப்ட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி முக்கிய வில்லனாகவும் நடித்திருக்கிறார் .படத்தின் டிஜிட்டல் விற்பனை இழுபறியாக போய்க்கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் தான் zee நிறுவனம் அதிக தொகைக்கு இதனுடைய உரிமையை கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.

karuppu

இதற்கு முன் சூர்யாவின் திரைப்படம் 85 கோடிக்கு விற்கப்பட்டிருந்தது. ஆனால் கருப்பு திரைப்படம் அதையும் தாண்டி விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ரிலீஸ் தேதியும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்க முதலில் ஜனவரி 23 அல்லது ஏப்ரல் 14 ஆகிய தேதிகளில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என ஆலோசித்து வந்தனர் .

பொங்கல் ரிலீஸ்: 

தற்சமயம் ஜனவரி 23ஆம் தேதியை படக்குழு லாக் செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பராசக்தி மற்றும் ஜனநாயகன் ஆகிய இரு பாடல்கள் ரிலீஸ் ஆவதால் அதனைத் தொடர்ந்து சூர்யாவின் கருப்பு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் படக்குழு இருப்பதாக தெரிகிறது.

இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இதற்கு இடையில் சூர்யாவின் ரசிகர்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு படங்கள் பொங்கல் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்க இப்போது கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆனால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் வரும். அதோடு வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கருப்பு திரைப்படத்தை பொங்கல் ரிலீஸாக வெளியிட மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *