">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
குண்டா ஃபுல்லா கொடுத்தாலும் கம்முனு குடிச்சுடுவாங்க போல… கொஞ்சம் கண்ட்ரோலா இரும்மா கீர்த்தி சுரேஷ்!
டீ விரும்பியாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்
�
தமிழ் சினிமாவில் “இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான “மகாநடி” படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
சமீப நாட்களாகவே உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தற்போது மிஸ் இந்தியா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கீர்த்தி தனது இன்ஸ்டா முழுவதும் டீ குடிக்கும் புகைப்படங்களையும், அது சம்மந்தப்பட்ட டீ ஷர்ட்டையும் அணிந்துக்கொண்டு டீ பைத்தியமாகவே மாறிவிட்டார். தற்போது International Tea Day முன்னிட்டு டீயை ருசித்து ரசித்து குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதன் மீதுள்ள காதலை கேப்ஷனாக கொடுத்துள்ளார்.