1. Home
  2. Latest News

பத்மபூஷன் கிடைக்க காரணம்!.. அஜித் சொன்ன வார்த்தையில் ஆடிப்போன மகிழ் திருமேனி!...


Ajithkumar: மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே பல விருதுகளை இந்திய குடிமகன்களுக்கு அறிவிக்கிறது. சினிமா, இலக்கியம், இசை, சமூக சேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளும் அடக்கம். திரையுலகை சேர்ந்த பலரும் இந்த விருதுகளை வாங்கியிருக்கிறார்கள்.

பத்மபூஷன்: எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவர் திருப்பி கொடுத்துவிட்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியர் விருது அளிக்கப்பட்டது. ரஜினிக்கு பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டது. கமலுக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அஜித்துக்கு விருது: இந்நிலையில்தான், சமீபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது. இந்தியாவில் அளிக்கப்படும் விருதுகளில் 3வது பெரிய கவுரமான விருது இது. அஜித் ரசிகர்களும் இதை கொண்டாடினார்கள். திரையுலகை சேர்ந்த பலரும் அஜித்துக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால், இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதாவது, விஜய்க்கு சரியான போட்டியாக அஜித் இருப்பதால் அவரை கவுரப்படுத்துகிறார்கள் என்றும் சிலர் சொன்னார்கள்.


அதேபோல், ‘சினிமாவில் பணியாற்றியதற்கு இந்த விருது கொடுப்பதாக இருந்தால் அஜித்துக்கு இது பொருந்தாது. ஏனெனில், அவர் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கே வரமாட்டார். அப்படிப்பட்டவருக்கு எப்படி இந்த விருது?’ என சினிமா பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இந்த விருது அறிவித்தவுடன் எல்லோருக்கும் நன்றி சொன்னார் அஜித்.

மகிழ் திருமேனி: இந்நிலையில், அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கியுள்ள மகிழ் திருமேனி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அஜித் சாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவுடன் அவருக்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பினேன். அதற்கு பதில் அனுப்பிய அவர் ‘எனக்கு இந்த விருது கிடைக்க பலரும் காரணம். அதில் நீங்களும் அடக்கம்’ என சொல்லியிருந்தார். நான் ஆடிப்போய்விட்டேன்.

அவருக்கு இந்த விருது கிடைக்க எந்த வகையிலும் நான் காரணமில்லை. அவரை வைத்து ஒரு படம் இயக்கியிருக்கிறேன். அவ்வளவுதான். ஆனால், அவர் அப்படி சொன்னதால் அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் யோசித்து கொண்டிருந்தேன். தனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதை கூட அவர் எல்லோருடனும் பகிர ஆசைப்படுகிறார். அந்த தாராள மனசு யாருக்கு வரும்’ என நெகிழ்ந்து பேசியிருந்தார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.