1. Home
  2. Latest News

எம்ஜிஆரை வளர்த்து விட்ட இயக்குனர்... ஆனா பிளாஷ்பேக்ல புரட்சித்தலைவர் செய்த காரியத்தைப் பாருங்க...

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரையுலகில் நுழைந்த போது கடும் சவால்களை சந்தித்தார்.

வெள்ளையர்கள் நம்மை ஆண்டு வந்த காலகட்டத்தில் தமிழ்த்திரை உலகில் புகழ் பெற்ற இயக்குனராக இருந்தவர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. இவர்களது படங்கள் என்றாலே அது வெற்றிகரமானவையாகத் தான் இருக்கும். எம்ஜிஆருடன் இவர்களது நட்பு உருவான விதம் சுவாரசியமானது. என்னன்னு பார்க்கலாமா...

இரட்டை இயக்குனர்களில் கிருஷ்ணன் வேல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தாராம். அப்போது வேலைக்குப் போகும்போது சைக்கிளில் தான் செல்வாராம். ஒருமுறை வேலைக்குப் போன அவர் வெளியில் சைக்கிளை நிறுத்தி விட்டு கம்பெனிக்குள் சென்று இரக்கிறார்.

திரும்ப வெளியில் வந்து பார்க்கும் போது சைக்கிள் அங்கு இல்லை. 'என்னடா இது மாயமா இருக்கு'ன்னு அவர் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. அப்போது அருகில் நின்ற ஒருவரிடம் விசாரித்துள்ளார். அவர் இப்போது தான் ஒருவர் வந்து சூட்டிங் நடக்குற இடத்துக்கு சைக்கிளை எடுத்துச் சென்றார் என்று விவரம் சொன்னார்.

'அப்படியா' என்று கேட்டு அங்கு விரைந்தார் கிருஷ்ணன். அது சதிலீலாவதி பட சூட்டிங். அந்தப் படத்தோட இயக்குனர் எல்லீஸ் டங்கன். எம்ஜிஆரை அவர் வெளியில் நிற்க வைத்திருந்தார்.

கிருஷ்ணன் சைக்கிளைத் தேடி அங்கு வந்தார். எம்ஜிஆர் அவரைப் பார்த்ததும் ஓடி வந்து 'மன்னிக்கணும். நான் செய்தது தப்பு தான். உங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் சைக்கிளை எடுத்து வந்துவிட்டேன்.

இந்தப் படத்தில் எனக்கு ரெண்டே ரெண்டு சீனு தான். அந்த நல்ல வாய்ப்பு மிஸ் ஆகிடக்கூடாதுன்னு தான் அவசரமா போகணும்னு சைக்கிளை எடுத்து வந்துவிட்டேன். சூட்டிங் முடிச்சதும் நானே கொண்டு வந்து விடுகிறேன்' என்றார். இதைக் கேட்ட கிருஷ்ணன் சரி என்றார். அதன்பிறகு இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு நட்பு உருவானது.

1949ல் ரத்னகுமார் என்ற ஒரு புதிய படம். அது கிருஷ்ணன் பஞ்சு இயக்குகிற படம். அவரிடம் எம்ஜிஆர் தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்டார். அவருக்காக ஒரு கேரக்டரையே உருவாக்கி வாய்ப்பு கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் படத்தில் அவருக்கு க்ளோசப் காட்சிகளையும் எடுத்து அசத்தி விட்டார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.