">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
8 ஆயிரம் கோடி பேருக்கு 5 ஆயிரம் கோடி கொடுத்த மோடி – மதுவந்தியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
கடந்த 9ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடம் அனைவரும் விளக்கேற்றுங்கள் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டது சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது.
அதைவிட அவர் கூறியதற்கு முட்டுக்கொடுத்து நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தி ‘9 மணிக்கு 9நிமிடம் விளக்கு எரியும்போது சூரிய கிரகணத்தோட பவரும் சந்திர கிரகணத்தோட பவரும் கூடும். இதை பல ஜோதிடர்கள் உறுதி செய்துள்ளனர். எனவே, பிரதமர் மோடி எதையும் தெரிந்துதான் செய்வார்’ எனப் பேசி ஒரு வெளியிட்ட வீடியோ அதை விட பெரிதும் கிண்டலடிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட மதுவந்தி ‘ உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 8 ஆயிரம் கோடி மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடியை கொடுத்துள்ளார்’ என ஒரு போடு போட்டார். மேலும், 30,000 கோடியில் 40 சதவீதம் 20,000 கோடி எனவும் கூறினார்.
இந்தியாவின் ஜனத்தொகையே 600 கோடிதான். மேலும், 8 ஆயிரம் கோடியை 5 ஆயிரம் கோடி பிரிச்சு கொடுத்தா தலைக்கு 62.50 பைசாதான் வருது. மதுவந்திக்கு அறிவியலும் தெரியவில்லை. கணக்கும் தெரியவில்லை என நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.
You need separate brain to understand #மதுவந்தி calculation!!! pic.twitter.com/k8jz0UYH1F
— Yogesh (@YogeshKD2228) April 10, 2020
#மதுவந்தி தவறான தகவல் கொடுத்ததை விட எனக்கு more striking ஆக இருந்தது அந்த confidence, chutzpah & entitlement. மெத்த படித்தவன் கூட "இத ஒருமுறை பாருப்பா, தப்பா எதாவது இருக்கிறதா" என்று கேட்பான். To let it go without verification takes a lot of courage — misplaced one at that.
— T.N. Raghu (@tnrags) April 10, 2020
#மதுவந்தி: உஜ்வாலா திட்டத்திலே 10000 கோடி மக்களுக்கு நிதி உதவி செய்தார்ன்னு போடுப்பா!#மாரிதாஸ்: மேடம்! நம்ப மாட்டாங்க?#மதுவந்தி:அப்படியா! அப்போ 8000 கோடி மக்களுக்கு 5000 கோடி நிதின்னு #Excel போடு, கூடவே 3000 கோடி Senior Citizen, ஊனமுற்றோர் நிதியும் சேர்த்துக்க!#madhuvanthi pic.twitter.com/DISmfUtxIo
— ✯H̴a̴p̴p̴y̴ ̴L̴i̴f̴e̴✯ (@happylife_twitz) April 9, 2020