விஷாலுக்கு அது கெடைச்சா ஒரு பிடி பிடிப்பாராம்... தனுஷ், பிரபுதேவா அதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க...
35 ஆண்டுகளாக தமிழ்சினிமா துறையில் நளபாகத்துல இருப்பவர் அண்ணாச்சி ஏ.எம்.ராதாகிருஷ்ணன். இவரது சமையலை சாப்பிடாத திரைக்கலைஞர்களே இல்லை எனலாம்.
ரஜினிகாந்த் முதல் தமிழ்ப்பட உலகில் பல நடிகர்களுக்கு சமையல் பண்ணிக் கொடுத்துள்ளார். அவருக்கு எந்தெந்த கலைஞர்களுக்கு என்னென்ன உணவுகள் பிடிக்கும் என்பது ரொம்ப நல்லாவே தெரியும்.
அந்த வகையில் அவர் விஷால், பிரபுதேவா, தனுஷ் என்று சில நடிகர்கள் என்னென்ன வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்...
விஷாலுக்கு காலையில் ஆப்பம், குழிப்பணியாரம் சாப்பிடுவார். மதியம் டெய்லி அவருக்கு சிக்கன் வேணும். மசாலா அதிகமா கேட்கமாட்டாரு. அரை உப்பு, அரை மசாலா தான். அப்புறம் மீன். இட்லிப்பானையில போட்டு அவிச்சிக் கொடுப்பேன்.
புதினாசட்னி போட்டு செய்வேன். இதுல காரமும் ஆயிலும் இல்லாததால் விரும்பி சாப்பிடுவார். மட்டன் அதிகமா சாப்பிட மாட்டார். நாட்டுக்கோழி விரும்பி சாப்பிடுவார். பிரபுதேவா சைவம் மட்டும் தான். விதவிதமா காய்கறி கொடுத்தா போதும். முட்டை கூட சாப்பிட மாட்டாரு.
கீரை அவருக்கு தினசரி வேணும். தனுஷ் சாருக்கும் சைவம் தான். ஆனா முட்டை மட்டும் சாப்பிடுவார். அதுல வித விதமா சாப்பிடுவாரு. மட்டன், சிக்கன் எல்லாம் சாப்பிட மாட்டார். முட்டையில புடலங்காயைப் போட்டு பொரியல் பண்ணிக் கொடுப்பேன். ரொம்ப விரும்பி சாப்பிடுவார்.
காலைல வெட்டுற மட்டனை சாயங்காலம் சமைக்க மாட்டோம். ப்ரீஷர்ல வச்சா கெட்டுடும். அதனால புட் பாய்சன் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. ஓட்டல்ல சாப்பிடுறதுல வர்ற பிரச்சனை இதுதான். சில ஓட்டல்களில் மட்டன், சிக்கனில் இருந்து புழு எல்லாம் வருது.
அதனால கண்ணு முன்னால வெட்டும்போது நின்னு வாங்கிட்டு வருவோம். ஒரு நாளைக்கு 2 தடவை தோசை மாவு ஆட்டுவோம். அதனால சமையல் பண்ணும்போது சுத்தம் ரொம்ப முக்கியம். அதுல நான் கரெக்டா இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.