ஆத்தா!.. மகமாயி!.. அடுத்த பார்ட் 2 படமா?.. உசுரு தாங்குமா!.. திரிஷா ஆசையில மண்ணை அள்ளிப் போட்ட நயன்?

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு வெளியானது. அந்த படத்துக்குப் பிறகு தமிழில் நயன்தாரா லீடு ஹீரோயினாக நடித்த எந்தவொரு படமும் ஓடவே இல்லை.
ஷாருக்கானின் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்த படம் மட்டும் தான் நயன்தாராவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் 2 படத்தை மாசாணி அம்மன் என பண்ணப் போவதாகவும் திரிஷா அதில் அம்மனாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், திடீரென வேல்ஸ் நிறுவனம் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் மீண்டும் நயன்தாராவே அம்மனாக நடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், அந்த அறிவிப்பில் எங்கேயும் ஆர்ஜே பாலாஜி பெயரே இடம்பெறவில்லை. வேல்ஸ் நிறுவனத்துக்கும் ஆர்ஜே பாலாஜிக்கும் சிங்கப்பூர் சலூன் படம் ஃபிளாப் ஆன பிறகு சண்டை ஏற்பட்டதா? அதனால் தான் ஆர்ஜே பாலாஜி தனியாக மாசாணி அம்மன் படத்தை பண்ணப் போகிறாரா? அதற்கு போட்டியாக இயக்குநரை கூட ஃபிக்ஸ் செய்யாமல் வெறுமனே ஒரு அறிவிப்பை வேல்ஸ் வெளியிட்டுள்ளதா? என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
சாமி ஸ்கொயர், சந்திரமுகி 2, இந்தியன் 2 என அடுத்தடுத்து 2ம் பாக படங்கள் ரசிகர்களின் உயிரை வாங்கி வரும் நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் உருவாக்கி என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ அந்த மகமாயிக்குத்தான் வெளிச்சம் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் நயன்தாராவே இந்த அறிவிப்பை வெளியிடாத நிலையில், அவருக்காவது இந்த படத்தில் நடிக்கப் போறோம் என்பது தெரியுமா? என்றே தெரியவில்லை.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..