">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தயவுசெய்து எனக்கு உதவுங்கள்!.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை கண்ணீர்…
தயவுசெய்து எனக்கு உதவுங்கள்!.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை கண்ணீர்…
வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து. இப்படத்திற்கு பின் அங்காடித்தெரு சிந்து என்றே திரையுலகினரால் அழைக்கப்பட்டார். அதன் பின் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிந்து நடித்து வந்தார். மேலும், அவ்வப்போது சமுக சேவைகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், திடீரென அவருக்கு மார்பக புற்றுநோய் தாக்கியது. எனவே, தான் வைதிருந்த மற்றும் திரையுலக நண்பர்கள் கொடுத்த பணத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும், நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்கு அவருக்கு பணம் தேவைப்படுகிறது.
எனவே, தனக்கு உதவினால் மீண்டு வருவேன். அதன் பின் நிச்சயம் பலருக்கும் உதவி செய்வேன் என அவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். சமீபத்தில் இவரை சந்தித்த நடிகர் பிளாக் பாண்டியும் திரையுலகினர் சிந்துவிற்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.