தற்கொலைக்கு முயன்ற ரசிகர்.. சென்னையிலிருந்தே காப்பாற்றிய ரஜினி! எப்படினு தெரியுமா?

by ராம் சுதன் |

சினிமாவை பொறுத்தவரைக்கும் ரசிகர்களிடம் அன்பை பெற்றுவிட்டால் அந்த ரசிகர்கள் தங்கள் உயிரையும் கொடுத்து தன் நடிகரின் படத்தை ஓடவைத்து விடுவார்கள். விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக படத்தை ஹிட்டடிக்க வைத்து விடுவார்கள். அப்படி கிட்டத்தட்ட 50 வருடங்களாக யானை பலம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

எம்ஜிஆர் காலத்திலேயே கட் அவுட் இருந்தாலும் ஆளுயர கட் அவுட் என்பது ரஜினி படத்திலிருந்துதான் ஆரம்பமானது. அதுவும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்றிருக்கும் கேரக்டருக்கு ஏற்ப கட் அவுட்டை வைத்து பிரமிக்க வைத்துவிடுவார்கள் ரஜினியின் ரசிகர்கள். உதாரணமாக அண்ணாமலை படத்தில் பால் டின் மற்றும் சைக்கிளுடன் ரஜினி இருப்பார். அதனால் உண்மையான சைக்கிளையே கட் அவுட்டில் பயன்படுத்திய சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.

ஏன் பாட்ஷா படத்தில் ஆட்டோகாரராக நடித்திருப்பார். அதனால் ஒரு உண்மையான ஆட்டோவையே கட் அவுட்டில் நிறுத்தி தீவிர ரஜினி ரசிகன் என நிரூபித்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு தியேட்டர் ஓனரே ரஜினி மீதிருந்த அன்பால் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ரஜினி நடித்த பாண்டியன் திரைப்படம் திருப்பத்தூரில் ரிலீஸான நேரம். அப்போது திருப்பத்தூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் ராமு என்ற பெயரில் தியேட்டர் இருக்கிறதாம்.

திருப்பத்தூர் அருகில் இருப்பதால் அந்த தியேட்டரில் பாண்டியன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கவில்லையாம். அதனால் அந்த தியேட்டர் ஓனர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஏனெனில் அந்த ராமு தியேட்டர் ஓனரின் மகன் தீவிர ரஜினி வெறியனாம். நான் ஒரு ரஜினியின் ரசிகனாக இருந்து என் அப்பா தியேட்டரில் ரஜினி படம் ஓடவில்லை என்றால் எவ்வளவு அவமானம் என நினைத்து தற்கொலைக்கு முயன்றாராம்.

எப்படியும் அவர் உயிர் பிழைத்து விட்டாராம். அதன் பின் வள்ளி திரைப்படம் ரிலீஸான நேரம். அது ரஜினியின் சொந்த புரடக்‌ஷன் என்பதால் அந்த ராமு தியேட்டர் ஓனரை ரஜினி அழைத்து ‘எப்பா என் படத்தை உன் தியேட்டரில் ரிலீஸ் செய். எந்தவொரு அட்வான்ஸும் வேண்டாம். ஆனால் உன் மகனை தற்கொலை எல்லாம் பண்ண சொல்லாத’ என சொல்லி வள்ளி படத்தை ரிலீஸ் செய்ய சொன்னாராம் ரஜினி.

Next Story