நம்பி தெரியாம உண்மையை சொல்லி மாட்டிக் கொண்ட நடிகர்.. ரஜினி இப்படிப்பட்டவரா?

by ராம் சுதன் |

இன்று , ஓ அப்படியா? சாரி... ஓ மை காட் என்ற வார்த்தைதான் இணையம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறது. சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்காவது ஆமாம்.. பாவம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் அதை விட்டு தமிழகமே திருவண்ணாமலையில் ஏற்பட்ட விபத்தை கேட்டு சோகத்தில் இருக்கும் போது அதை பற்றி எனக்கு தெரியாது என கடந்து சென்றார் ரஜினி.

ஏன் அவர் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கலாம். இன்று அவர் இந்தளவுக்கு ஒரு உச்சத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் தமிழக மக்கள்தான். ஒரு விபத்து, காய்ச்சல், தலைவலி என்றால் ஒன்றும் கிடையாது. செய்தியில் தலைப்பு செய்தியாக வந்ததே திருவண்ணாமலை விபத்து பற்றித்தான். இது பற்றி எப்படி தெரியாது என ரஜினி கூறினார் என்பதுதான் அனைவருக்குமான ஆச்சரியம்.

இந்த நிலையில் ரஜினியை பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை கூறியிருந்தார். திருவண்ணாமலை விபத்து பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையிலேயே ரஜினி எப்படிப்பட்டவர் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறினார் செய்யாறு பாலு.

பாபா படத்தின் போது அந்தப் படத்தில் பூவிலங்கு மோகனும் நடித்திருந்தாராம். சின்னத்திரையில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக இருப்பவர் பூவிலங்கு மோகன். பாபா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஓய்வு இடைவெளியின் போது ரஜினி, பூவிலங்கு மோகன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது ரஜினி பூவிலங்கு மோகனிடம் ‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ’ என கேட்டாராம்.

நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என பூவிலங்கு மோகன் சொல்ல ஒரு நாளைக்கு சம்பளம் எவ்வளவு என்று ரஜினி கேட்டாராம். 6000 சம்பளம் என பூவிலங்கு மோகன் சாதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறார். பாபா படத்தில் பூவிலங்கு மோகனுக்கு 10 நாள் கால்ஷீட் இருந்ததாம். அவர் சம்பந்தமான காட்சிகள் எல்லாம் படமாக்கியதும் மொத்த சம்பளமாக 60000 பூவிலங்கு மோகனுக்கு கொடுக்கப்பட்டதாம்.

அப்பொழுதுதான் பூவிலங்கு மோகனுக்கு ‘அன்று ரஜினி நம்மிடம் சாதாரணமாக கேட்க அதை வைத்துதான் இப்போது பாபா படத்திற்கு சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள்’ என தெரிய வந்திருக்கிறது. பாபா படத்தை பொறுத்தவரைக்கும் அது ரஜினியின் சொந்தப் படம்தான். இருந்தாலும் புரடக்‌ஷனிலும் அவருடைய தலையீடு இருக்கத்தான் செய்கிறது போல என செய்யாறு பாலு இந்த செய்தியை பற்றி பகிர்ந்திருக்கிறார்.

Next Story