Thalaivar173: ரஜினி – சுந்தர்.சி காம்பினேஷன் டவுட்டாதான் இருக்கு!.. இது நடந்தா தப்பிக்கலாம்!. ரசிகர்கள் கமெண்ட்!…

Published on: December 5, 2025
---Advertisement---

சுந்தர்.சி-யின் இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற செய்தி ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே சீனியர் இயக்குனருடன் இணைந்து பயணிப்பதை ரஜினி நிறுத்திவிட்டார். கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன், லோகேஷ் போன்ற இளம் இயக்குனர்களுடன் பயணிக்க துவங்கினர். சிபி சக்ரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி போன்ற ஒரு படம் ஹிட் கொடுத்த இயக்குனர் என்றாலும் அவர்களிடம் ‘எனக்கு ஏதாவது கதை இருக்கிறதா?’ என்று கேட்டார் ரஜினி.

எனவேதான் சுரேஷ் கிருஷ்ணா. கே.எஸ் ரவிக்குமார் போன்ற சீனியர் இயக்குனர்கள் பக்கம் ரஜினி போகவே இல்லை. ஆனால் தற்போது சுந்தர்.சி-யை டிக் அடித்திருக்கிறார். சுந்தர்.சி ஜாலியான காமெடி படங்களை எடுப்பவர். அவர் ரஜினியை வைத்து இயக்கிய அருணாச்சலம் படம் கூட சுமாரான படம்தான். எனவே அவரின் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஏன் ஒப்புக்கொண்டார் என்கிற கேள்வி ரஜினி ரசிகர்கள் மனதிலேயே எழுந்திருக்கிறது.

ரஜினிக்கு காமெடி வரும் என்றாலும் ரஜினியை வைத்து முழு நீள காமெடி படம் கொடுக்க முடியாது. அதேபோல முழு நீள ஆக்சன் படமும் கொடுக்க முடியாது. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே அதுபோன்ற கதைகளில் நடித்து சலித்து போய்தான் ரஜினி சுந்தர்.சி-யை தேர்ந்தெடுக்கிறார்.

rajini sundar c

எனவே இந்த காம்பினேஷனை பார்க்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது என ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூகவலைகளில் பதிவிட்டு வருகிறார்கள். அவர்கள் சொல்வது என்னவெனில் சுந்தர்.சி எடுத்த ஆக்சன்/காமெடி படங்கள்  கொடூரமாகத்தான் இருக்கும், ரிஷி, வின்னர், சின்னா, ரெண்டு, ஆம்பள, ஆக்சன் போன்ற சுந்தர்.சி படங்களை தியேட்டரில் பார்த்து காண்டானதுதான் மிச்சம்.

ஆக்‌ஷனையும் காமெடியையும் கலந்து கரெக்டா ஒரே மீட்டரில் படமெடுத்து அவருக்கு கிளிக் ஆனது கிரி மட்டும்தான். மற்ற படங்களில் காமெடி ட்ராக் மட்டுமே நன்றாக இருக்கும். அருணாச்சலம் படத்தில் நடந்ததெல்லாம் ரஜினியின் மேஜிக் மட்டும்தான். அந்த சமயத்தில் வந்த அண்ணாமலை, பாட்ஷா, முத்து படங்களோடு ஒப்பிடும்போது அருணாச்சலம் சுமார் என அப்போதே விமர்சனங்கள் வந்தது.

எனவே ரஜினி சுந்தர்.சி காம்பினேஷன் படம் எப்படி வரும்னு தெரியல.. ரஜினி இருக்கார் என்பதற்காக முழு ஆக்சன் படமா பண்ணாம சுந்தர்.சி தன்னுடைய ஏரியாவான குடும்ப காமெடி கதைக்குள்ள ரஜினியை கூட்டிட்டு போனா நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு ஸ்டைல், ஆக்சன், மாஸ் என கதையை உருவாக்கினால் படம் ரசிகர்களை டயர்ட் ஆக்கிவிடும் என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.

ரஜினியை வைத்து சுந்தர்.சி என்ன மாதிரியான படத்தை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment