சம்பள விஷயத்தில் கடுப்பான தனுஷ்!.. இளையராஜா பயோகிராபி டேக் ஆப்ஆகாமல் போனதற்கு காரணம்!…

Published on: December 5, 2025
---Advertisement---

தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் பல படங்களை ஓட வைத்தவர் இசைஞானி இளையராஜா. 80களில் தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளராக இருந்தார். இவரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. அப்போதிருந்த முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லாருமே தங்கள் படங்களின் வெற்றிக்கு இளையராஜாவை நம்பி இருந்தார்கள்.

தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம் என்கிற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து இசை மீது இருந்த ஆர்வம் காரணமாக இருந்து சகோதரர்களுடன் கிளம்பி சென்னை வந்து முறையாக இசையை கற்று உதவி இசையமைப்பாளராக வேலை செய்து அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைக்க துவங்கி அந்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறி ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. அவர் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல.. அவரின் வெற்றிக்கு பின்னால் கடினமான உழைப்பு இருக்கிறது.

ilayaraja

அந்நிலையில்தான் அவரின் வாழ்க்கை பற்றிய பயோபிக்கை தனுஷை வைத்து திரைப்படமாக எடுக்கும் முயற்சி நடந்தது. இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிப்பதாகவும், படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அறிவிப்புகள் வெளியானது. ஆனால் என்ன காரணமோ இந்த படம் டேக்ஆப் ஆகவில்லை. இந்நிலையில்தான் இதற்கான பின்னணி தெரிய வந்திருக்கிறது.

இந்த படத்தில் தனது சம்பளமாக லாபத்தில் பங்கு என இளையராஜா கேட்டிருக்கிறார். அருண் மாதேஸ்வரனும் தனக்கான சம்பளத்தை சொல்ல இதையெல்லாம் ஏற்றுக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் தனுஷிடம் சென்று ‘நீங்கதான் தீவிரமான இளையராஜா ரசிகர் ஆச்சே. .சம்பளமே வாங்காம இந்த படத்தில் நடித்து கொடுக்க முடியுமா?’ என கேட்க அதில் கடுப்பாகிதான் தனுஷ் இந்த படத்தில் நடிக்க ஆர்வமே காட்டவில்லை என செய்திகள் கசிந்திருக்கிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment