மேடம் ‘விடாமுயற்சி’ பார்த்தீங்களா? விமான நிலையத்தில் நிருபர் கேள்விக்கு நயனின் ரியாக்ஷன்

பிள்ளையார் சுழி போட்ட விக்கி: இரண்டு வருடங்கள் கழித்து அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பிறகு அஜித் கமிட்டான திரைப்படம் இது. முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தான் இருந்தது. அது சம்பந்தமான அறிக்கை எல்லாம் வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக விக்னேஷ் சிவனும் அவருடைய இணையதள பக்கத்தில் அந்த அறிக்கையை பகிர்ந்து இருந்தார்.
திருப்தியில்லாத லைக்கா: அதிலிருந்து விக்னேஷ் சிவனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வாழ்த்துக்களையும் கூறி வந்தனர். ஆனால் ஸ்கிரிப்டில் சில பல மாற்றங்கள் செய்ததனால் அதில் சில சறுக்கல்கள் இருந்ததனால் லைக்கா நிறுவனம் அந்த ஸ்கிரிப்ட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகும் சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் கணவருக்காக நயன்தாராவும் லைக்கா நிறுவனத்திடம் பலமுறை பேசி பார்த்து இருக்கிறார்.
மகிழ்திருமேனி எண்ட்ரி: ஆனால் லைக்கா தரப்பிலிருந்து எந்த ஒரு சரியான பதிலும் வரவில்லை. அதன் பிறகு தான் மகிழ் திருமேனி இந்த படத்திற்குள் நுழைந்தார். மகிழ்திருமேனி வந்ததிலிருந்து அடுத்தடுத்து விடா முயற்சி படத்திற்கான வேலைகள் ஆரம்பமானது. இடையில் சில காலதாமதம் ஏற்பட்டாலும் அவ்வப்போது ஷூட்டிங் நடந்து கொண்டு தான் இருந்தது. இடையில் அஜித் கார் ரேஸ் பைக் ரேஸ் என பிரேக் எடுத்தாலும் படத்தை ஒரு வழியாக முடித்து நேற்று தான் இந்த படம் ரிலீஸ் ஆனது.
கலவையான விமர்சனம்: படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத ஒரு கேரக்டரில் அஜித் இந்த படத்தில் நடித்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித்தை எப்போதும் மாஸாக ஒரு ஆக்சன் ஹீரோவாக பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் கொஞ்சம் ஏமாற்றத்தை தான் தந்திருக்கிறது. ஏனெனில் ஒரு பெரிய நடிகர். அவரை எந்த அளவுக்கு மாஸாக காட்ட வேண்டுமோ அதற்கு நேர் எதிராக அவருடைய இமேஜ் இந்த படத்தில் குறைத்து இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.
இருந்தாலும் வளரும் நடிகர்களுக்காக அஜித் மிகவும் கீழ் இறங்கி இப்படி நடித்திருப்பது ஒரு வித பாராட்டுக்குரிய விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று விமான நிலையத்தில் நயன்தாரா தனது குழந்தைகளுடன் வர அவரை சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள் மேடம் விடாமுயற்சி படத்தை பார்த்தீர்களா என பலமுறை கேட்டனர் .ஆனால் அதற்கு நயன்தாரா எந்தவித பதிலும் அளிக்காமல் அவருடைய முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டார். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DFxV1gVosno/?igsh=dzJnMDVwbDBvdWE3