அடுத்தடுத்த அறிவிப்பால் அதிரடி காட்டிய சிம்பு.. கடைசில ஜனநாயகனுக்கே ஆட்டம் காட்டுறாரா?

அதிரடி காட்டிய சிம்பு: தனது அடுத்தடுத்த அறிவிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் நடிகர் சிம்பு. நள்ளிரவு 12 மணிக்கு சிம்புவின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கிறது என டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி சிம்புவின் 49 ஆவது படம் குறித்த ஒரு அறிவிப்பை தான் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அந்தப் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். படத்தில் சிம்புவின் லுக்கை பார்க்கும் பொழுது கல்லூரி மாணவனாக நடித்திருப்பதாக தெரிகிறது .
சிம்பு 49: மோஸ்ட் வான்டெட் ஸ்டுடென்ட் என்ற ஒரு ஹாஸ் டேக்கில் அந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று அவர் ஏற்கனவே நடித்து முடித்திருக்கும் தக் லைஃப் படத்தின் குழுவில் இருந்து பிறந்தநாள் வாழ்த்தை அவர் சம்பந்தப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அந்த வீடியோவிலும் தக் லைஃப் படத்தின் புதிய லுக்கில் சிம்பு இருந்தது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை தந்தது.
சிம்பு 50:அதோடு அவருடைய ஐம்பதாவது படம் குறித்த இன்னொரு அப்டேட்டும் இன்று வெளியானது. ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக ஒரு படம் இருந்தது. அந்த படத்தை மும்பை தொழிலதிபரான கண்ணன் ரவி தயாரிப்பாக தான் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்தப் படத்தை சிம்புவே தயாரிப்பதாக இன்று அறிவித்திருக்கிறார். இதன் மூலம் முதன்முறையாக தயாரிப்பாளராக களம் இறங்குகிறார் சிம்பு.
முதல் தயாரிப்பு: இந்த படத்தை தன்னுடைய ஆத்மன் நிறுவனம் என்ற பெயரில் தயாரிக்கிறார் சிம்பு. இந்த நிலையில் ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒரு படத்தைப் பற்றிய செய்தியும் வெளியானது . இப்போது கிடைத்த தகவலின் படி சிம்புவின் 49 வது படம் ஏப்ரல் மாதம் தொடங்கி குறுகிய கால தயாரிப்பாக படத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
ஏனெனில் படத்தை டிசம்பர் மாதம் வெளியிட அந்த நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக இருந்ததாம். ஆனால் சிம்புவின் இந்த 49வது திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் 2026 பொங்கல் அன்று விஜய் நடிப்பில் அனைவரும் எதிர்பார்க்கும் திரைப்படமான ஜனநாயகன் திரைப்படமும் அன்றுதான் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற ஒரு தகவலும் உள்ளது.
அப்படி என்றால் ஜனநாயகன்படத்தோடு சிம்புவின் இந்த படம் மோத வாய்ப்பு இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் அப்படி நடக்க வாய்ப்பு இருக்காது என்று தான் தெரிகிறது. ஏனெனில் விஜயின் கடைசி படம் என்பதால் அதை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். ஆனால் கோடம்பாக்கத்தில் சிம்புவின் 49வது படம் ஒரு வேளை பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என்றும் கூறி வருகிறார்கள்.